மக்களுக்கு சேவை செய்ய அரசு நடத்தும் கால் சென்டரில் பணிபுரியும் கார்த்தி பட நடிகை. யார் தெரியுமா ?

0
1040
nikhila
- Advertisement -

ஒட்டுமொத்த உலகையும் புரட்டி போட்டு உள்ளது இந்த கொரோனா வைரஸ். சீனாவில் ஆரம்பித்த இந்த கொரோனாவின் தாக்கம் தற்போது உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவி மக்களை திக்குமுக்கு ஆட வைத்து உள்ளது. நாளுக்கு நாள் கொரோனாவினால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது தவிர குறைந்தபாடில்லை. தற்போது இந்தியாவில் கொரோனாவினால் 9152 பேர் பாதிக்கப்பட்டும், 308 பேர் பலியாகியும் உள்ளனர். இதனால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

-விளம்பரம்-

ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்துக்கு, கடைகள், பொது இடங்கள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. சினிமா முதல் சின்னத் திரை வரை என அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், மருத்துவர்கள், காவல்துறை, அரசாங்கம், சுகாதாரத்துறை என பலரும் தங்களுடைய உயிரை பணயம் வைத்துப் போராடி வருகின்றார்கள்.

இதையும் பாருங்க : இலவசமாக பெற்ற செவிலியர் சான்றிதழை பதிவிட்ட ஜூலி. அதை நீங்களும் பெறலாம் எப்படி தெரியுமா?

- Advertisement -

இந்த இக்கட்டான சூழ்நிலையில் சினிமா பிரபலங்கள் பலர் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை நிகிலா விமல் அவர்கள் லாக்டவுன் நேரத்தில் மக்களுக்கு சேவை செய்வதற்காக கால் சென்டரில் தன்னார்வத்துடன் சேர்ந்துள்ளார். ஊரடங்கு உத்தரவால் மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள்.

இதனால் நாடு முழுவதும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொடுப்பதற்கு கேரள மாநிலம் கண்ணூரில் கால் சென்டர் செயல்பட்டு வருகிறது. இந்த கால் சென்டர் மையத்தில் வேலை பார்க்க ஆர்வம் உள்ளவர்கள் தேவை என விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இதனை பார்த்த நடிகை நிகிலா விமல் அவர்கள் உடனடியாக அந்த கால் சென்டருக்கு சென்று வேலையில் சேர்ந்தார்.

-விளம்பரம்-

தற்போது நடிகை நிகிலா விமல் தன் ஆர்வத்துடன் கால் சென்டரில் வேலை செய்து வருகிறார். இது குறித்து அவரிடம் கேட்டபோது நிகிலா கூறியது, நாடே தவித்து கொண்டு இருக்கும் இந்த இக்கட்டான நேரத்தில் மக்களுக்கு உதவ கால் சென்டரில் பணியாற்றுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார். நிகிலாவின் இந்த செயலுக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் பாருங்க : மாஸ்டர் படத்தில் மாளவிகாவிற்கு டப்பிங் கொடுத்துள்ளது இந்த நடிகை தான். யார் தெரியுமா ?

சத்யன் அந்திக்காடு இயக்கிய பாக்யதேவதா என்ற மலையாள படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிகிலா விமல். அதன் பின் இவர் சசிகுமார் நடித்த வெற்றிவேல் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நிகிலா விமல். பின்னர் கிடாரி படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தார். சமீபத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற தம்பி படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதனை தொடர்ந்து இவர் ஒரு சில படங்களில் கமிட் ஆகி உள்ளார்.

Advertisement