மீடூ சர்ச்சையில் சிக்கினாரா நடிகர் விஷால்..!அவரே சொன்ன பதில்..!

0
150
Vishal

கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமாவில் #மீடூ விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னனி பாடகி சின்மயி, பாடலாசிரியர் வைரமுத்து மீது முன்வைத்த பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து பல்வேறு பிரபலங்களும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து #மீடூவில் பகிர்ந்துவந்தனர்.

Vishal

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் விஷாலிடம், மீடூ குறித்து கேள்வி எழுப்பபட்டது. அப்போது பேசிய அவர், தமிழ் சினிமாவோ, தெலுங்கு, மலையாளம் அல்லது கன்னட சினிமாவோ, பணியிடத்தில் நடிகைகளின் பாதுகாப்பும் வசதியும் உறுதிப்படுத்தப் பட வேண்டும். வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக பெண்கள் பாலியல் வற்புறுத்தல்களுக்குப் பலியாகக் கூடாது.

என்னுடைய படங்களில் நடிக்கும் பெண்களுக்கான பாதுகாப்பை நான் பார்த்துக் கொள்கிறேன். அதே பாதுகாப்பை நாடு முழுவதும் உள்ள திரைத் துறையினர் அளிக்க வேண்டும்.ஒரு படம் குறித்து வாக்கு கொடுத்துவிட்டு நிறைவேற்ற முடியாததற்காக, இன்னும் பிற காரணங்களுக்கான பழிவாங்கும் நடவடிக்கையாக மீ டூ பயன்படுத்தப்படுகிறது.

கண் விழிக்கும்போது என்னுடைய பெயரைக் கேட்க வேண்டிவருமா என்ற பயத்துடன் இருக்க வேண்டிய நிலை வந்துவிட்டது. இந்த அவநம்பிக்கை, பயம், சந்தேகம் ஆகிய சூழல் நீக்கப்பட வேண்டும்.தனிப்பட்ட காரணங்களுக்காக நடிகர்களின் பெயர்களைக் களங்கப்படுத்துவதைத் தடுக்க வேண்டும்.

மேலும்,மனம் ஒத்து பழகுவதற்கும் ஒருவரை தவறாக உபயோகிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. நானும் சில பெண்களுடன் டேட்டிங் சென்றிருக்கிறேன், அதனால் அவர்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தினேன் என்று அர்த்தமில்லை என்று தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்.