சொன்ன வாக்கை காப்பாத்திய விஷால்..! ஒரு டிக்கெட்டுக்கு 1 ரூபாய்..! விவசாயிகளுக்கு எவ்ளோ லட்சம் கொடுத்தார் தெரியுமா.?

0
932
- Advertisement -

நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு நலத்திட்ட செய்லகளை அறிவித்திருந்தார். அதில் ஒன்று இனிமேல் வெளியாக இருக்கும் தமிழ் சினிமாக்கள் அனைத்தும் ஒரு டிக்கெட்டிற்கு 1 ருபாயை விவசாயிகளின் நலனுக்காக வழங்க வேண்டும் என்று அறிவித்திருந்தார்.

-விளம்பரம்-

vishal

- Advertisement -

விஷாலின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தயாரிப்பாளர்களிடம் எதிர்ப்பும் கிளம்பியது. மேலும், விஷாலும் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார், அவரது தயாரிப்பில் வெளியாகும் படங்களில் இருந்து விவசாயிகளுக்கு உதவி செய்வாரா என்று கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் நடிகர் விஷால் நடித்து அவரது தயாரிப்பில் வெளியான “இரும்பு திரை” படத்தில் கிடைத்த வருமானத்தில் இருந்து 10 லட்ச ரூபாயை விவசாயிகளின் நலனுக்காக அளித்துள்ளார். நடிகர் விஷால் தற்போது லிங்குசாமி இயக்கத்தில்”சண்டகோழி 2″ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பெண் ஸ்டூடியோ நிறுவனத்துடன் இணைந்து விஷால் பிலிம் பேக்டரி தயாரித்துள்ளது.

-விளம்பரம்-

irumbuthirai movie

சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தின் இசையை பிரபல மலையாள நடிகர் மோகம் லால் வெளியிட்டிருந்தார்.இந்த விழாவின் போது பேசிய விஷால், தான் கூறியது போலவே விவாசியோகளுக்கு விஷால் ஃபிலிம் ஃபேக்ட்ரி மூலம் தயாரித்த இருப்புத்திரை படம் வசூல் செய்த ஒவ்வொரு டிக்கெட்டிற்கு 1 ருபாய் என்ற வீதம் 10 லட்ச ரூபாயை அளிதிருந்தார்.

இந்த விழாவின் போது நிகழ்ச்சியில் பங்கேற்ற 20 விவசாயிகளை மேடையேற்றி அவர்களுக்கு மாலையிட்டு கௌரவிக்கப்பட்டு, 10 லட்ச ரூபாயை இயக்குனர் பாண்டியராஜன் மூலம் வழங்கினார் விஷால். விவசாயிகளுக்கு நிதியுதவியை அளித்ததும் அரங்கத்தில் இருந்த அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

sandakozhi-2

விஷாலின் இந்த செயலுக்கு பலர் பாராட்டி வந்தாலும் இதை “சண்டகோழி 2” படத்தின் விளம்பரத்திற்காக செய்கிறார் என்று சிலர் குறை கூறி வருகின்றனர். இருப்பினும் விவசாயிகளுக்காக நடிகர் விஷால் செய்துள்ள இந்த விடயம் அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது.

Advertisement