17 வயது பெண்ணிற்கு தொல்லை கொடுத்தாரா பிக் பாஸ் டேனியல் ? வெளியான ஆதாரத்தால் சர்ச்சை.

0
1207
dane

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் என்றும் சர்ச்சைக்கு பஞ்சமே இருந்தது இல்லை. அதிலும் ஜூலி, மீரா மிதுன், சுஜித்ரா போன்றவர்கள் பிக் பாஸ்ஸுக்கு பின்னரும் பல சர்ச்சைகளில் சிக்கினர். இப்படி ஒரு நிலையில் முதன் முறையாக சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகரும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான டேனியல். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்குபெற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் டேனி. ஆனால், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னதாகவே பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். இவர் முதன் முதலாக தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்து இருந்தார். அதிலும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு என்ற கதாபாத்திரத்தில் இவர் பேசிய ‘பிரெண்டு லவ் மேட்டரு’ என்ற வசனத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தார். அதன் பின்னர் இவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பும்.பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த டேனி மேடையில் தனது காதலியான டெனிஷா குறித்து மிகவும் உருக்கமாக பேசி இருந்தார்.

இதையும் பாருங்க : மேம், நான் உங்கள மாதிரி இருக்கேனா ? சமந்தாவை டேக் செய்து பவித்ரா கேட்ட கேள்வி. சமந்தாவின் பெருந்தன்மையான பதில்.

- Advertisement -

பல ஆண்டுகளாக டெனிஷாவை காதலித்து வரும் டேனி வெளியே சென்றதும் அவரை திருமணம் செய்துகொள்வேன் என்றும், தனது திருமணத்தை கமல் முன் நின்று நடத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.டேனி கூறியது போலவே வெளியே சென்றதும் தனது நீண்ட வ்ருட காதலியான டெனிஷாவை திருமணம்செய்துகொண்டார். 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் தேதி தனது காதலி டெனிஷாவை பதிவு திருமணம் செய்து கொண்ட டேனிக்கு கடந்த ஆண்டு தான் குழந்தை பிறந்தது.

பிக் பாஸுக்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வரும் இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பெண் ஒருவருடன் பேசிய ஸ்க்ரீன் ஷாட் ஆதாரங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  “Thonuchu Solliton” என்ற கணக்கில் இருந்து டேனியல் 17 வயது பள்ளி வயது பெண்ணுடன் மோசமாக பேசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ‘ நான் அந்த பெண்ணின் விவரங்களைச் சேர்க்கவில்லை. டேனியல் போப் இரவு நேர பல பெண்கள் டி.எம்-கிற்கு மெசேஜ் செய்து அவர்களின் படங்களைக் கேட்கிறார்.

-விளம்பரம்-

அவள் 17 வயது பள்ளி பெண் (அவள் புத்திசாலி. அவன் கேட்டபோது அவளுடைய விவரங்கள் எதுவும் அவனுக்குக் கொடுக்கவில்லை) இந்த டேனியல் போப் ஒரு குழந்தையுடன் திருமணமான நபர் . அவர் தனது படங்களை இரண்டு முறை மற்றும் அதுவும் அதிகாலை 2 மணிக்கு அனுப்பும்படி கேட்டுள்ளார். அவர் எவ்வளவு காலமாக இதைச் செய்கிறார் என்று தெரியவில்லை’ என்று அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

Advertisement