4 மாதத்திற்கு முன் வாழ்த்து தெரிவித்த விவேக்கிற்கு பதில் அளிக்காமல் இறந்த பின் மன்னிப்பு கேட்ட புகழ். (வைரலாகும் புகைப்படம்)

0
2597
pugal
- Advertisement -

தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவான்களில் ஒருவராக திகழ்ந்து வந்த விவேக் இன்று (ஏப்ரல் 17 ) காலமாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் நடிகர் விவேக். நகைச்சுவையின் மூலம் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விவேக்.நடிகராக மட்டுமல்லாமல் பல்வேறு சமூதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் விவேக் லட்ச கணக்கான மரங்களை நட்டுள்ளார். இப்படி ஒரு நிலையில் நேற்று (ஏப்ரல் 16) நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

-விளம்பரம்-

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி இன்று காலை 4.35 மணி அளவில் காலமானார். விவேக்கின் மறைவிற்கு பல்வேரு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர். அதே போல தமிழ் சினிமாவின் பல்வேறு நடிகர் நடிகைகளும் விவேக்கின் உடலுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தனர். விவேக்கின் உடல் சற்று முன்னர் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இதையும் பாருங்க : சார் உங்க கூட தான முதலில் நடித்தேன் – ஆண்ட்ரியா பகிர்ந்த தனது உருக்கமான புகைப்படம்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் புகழுக்கு நடிகர் விவேக் அனுப்பிய இன்ஸ்டாகிராம் மெசேஜ்ஜின் ஸ்க்ரீன் ஷாட் சமூக வலைத்தளத்தில் வைரலாக பிறவி வருகிறது. அதில், புகழுக்கு நடிகர் விவேக் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி ‘ஹேலோ புகழ், எப்படி இருக்கீங்க’ என்று மெசேஜ் செய்துள்ளார். ஆனால், அதற்கு புகழ் எந்த ஓர் பதிலும் கொடுக்காமல் இருந்துள்ளார். அதே போல கடந்த மார்ச் 8 ஆம் தேதியும் ஹேலோ புகழ் என்று மெசேஜ் செய்துள்ளார் விவேக், அதற்கும் புகழ் பதில் அளிக்கவில்லை.

இப்படி ஒரு நிலையில் விவேக் இறந்த பின்னர் தான் விவேக் அனுப்பிய மெசேஜுக்கு அய்யா மன்னிச்சிடுங்க என்று உருக்கத்துடன் பதில் அளித்துள்ளார் புகழ். இதுமட்டுமல்லாமல் புகழும் நடிகர் விவேக்கின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு தன்னுடைய இறுதி மரியாதையை செலுத்தி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement