விவேக்கின் நெருங்கிய உறவினருக்கு கொரோனா. அரசு மருத்துவமனையில் சிகிச்சை.

0
998
- Advertisement -

உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் மின்னலை விட வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவின் பரவல் அதிகரிக்கிறதே தவிர குறைந்தபாடு இல்லை. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 138000 தாண்டி உள்ளது. அதில் 89,532 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தற்போது 46,969 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 1,966 பேர் கொரோனா தொற்றால் இறந்து உள்ளார்கள். இந்நிலையில் நடிகர் விவேக் அவர்களின் நெருக்கிய உறவினர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்து உள்ளார்.

-விளம்பரம்-

இது குறித்து நடிகர் விவேக் அவர்கள் ட்விட் ஒன்று வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியது, எனது மைத்துனர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு காய்ச்சல், மூச்சுத் திணறலுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் 10 நாட்களில் முற்றிலும் குணமடைந்தார். எளிய இடம் ஆனால், சிறந்த மருத்துவ வசதி, சிகிச்சை, தரமான உணவு கிடைத்ததாம். அரசு மருத்துவர்களுக்கு நன்றி என்று கூறி அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மருத்துவக்குழுவிற்கு தனது நன்றிகளை தெரிவித்துள்ளார் நடிகர் விவேக்.

இதையும் பாருங்க : ரஜினி(கன்னடர்), விஜய் (கிருஸ்துவர்). இவங்க ரெண்டு பெரும் மீதும் வழக்கு தொடரப்போறேன் – மீரா மிதுன் கொடுத்த ஷாக்.

- Advertisement -

சமீபத்தில் கூட இயக்குனர் மஜீத் அவர்கள் கொரானவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணம் அடைந்தார். ஆனால், அவருடைய சிகிச்சை செலவு 4 லட்சத்துக்கும் மேல் இருந்தது. அதை அவராலும் அவருடைய மனைவியாலும் அந்த பணத்தை கட்ட முடியவில்லை. பின்பு தயாரிப்பாளர் ஒருவர் அவருடைய சிகிச்சை செலவை பொறுப்பேற்று மருத்துவமனையில் மஜீத்தை டிஸ்சார்ஜ் செய்தார். இந்த நிகழ்வு பல பிரபலங்களுக்கு நடந்து உள்ளது.

அந்தவகையில் விவேக்கின் இந்த ட்விட் மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீதும் அரசு மருத்துவமனைகள் மீதும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் அளவு குறைந்தும், குணமடையும் மக்களின் அளவு அதிகரித்தும் உள்ளது. இருந்தாலும் செங்கல்பட்டு, மதுரை, திருச்சி மற்றும் தஞ்சை போன்ற நகரங்களில் தொற்று அதிகரிப்பது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement