சென்னை கேகே நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் முதுநிலை மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மாணவிகளுகளிடம் ஆபாசமாக நடந்து கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து 40-க்கும் மேற்பட்ட மாணவிகள் ராஜகோபாலன் மீது புகாரளித்துள்ளனர். புகாரின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ள ராஜகோபாலன் மீது 5 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் விவாதத்தை உண்டாக்கியுள்ளது. பல்வேறு மாணவிகள் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் குறித்துப் பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர்.
இந்த விவகாரம் துவங்கிய நாளில் இருந்தே ஒய் கி மகேந்திரனும் அவரது குடும்பத்தினரும் சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றனர். அதிலும் இந்த விவகாரம் குறித்து மதுவந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் தவறு செய்த ஆசிரியரை காண்டிப்தை விட தங்கள் குடும்ப பள்ளியின் பெயர் கெடக்கூடாது என்பதில் தான் அக்கறை காட்டி பேசினார்.
இதையும் பாருங்க : டான் பாஸ்க்கோவில் விநாயகர் சதுர்த்தி – ஒரே விஷயத்தை மாற்றி மாற்றி சொன்ன YGM & மதுவந்தி. நெட்டிசன்கள் சும்மா இருப்பாங்களா ? வீடியோவ பாருங்க.
இதனால் ஒய் ஜி மகேந்திரன், மதுவந்தி ஆகியோர் பேசிய பழைய வீடியோக்களை எல்லாம் தோண்டி எடுத்து ட்ரோல் செய்து வருகின்றனர். அருண் என்பவரை மதுவந்தி காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகர் ஜெமினி கணேசன் – நடிகை சாவித்ரியின் மகளான விஜய சாமுண்டீஸ்வரியின் மகன் தான் இந்த அருண் என்பது குறிப்பிடத்தக்கது. அருண், மதுவந்தி தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். இப்போது அருண், மதுவந்தி இருவருக்கிடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில், மதுவந்தி சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்று கொண்டதாக அவரின் விக்கிப்பீடியா பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக கடந்த ஆண்டு நடிகை மதுவந்தி பேசுகையில் “நாங்கள் இருவரும் சட்டப்பூர்வமாக பிரிந்து விடலாம் என்று பரஸ்பர புரிதலுடன் முடிவு எடுத்திருக்கிறோம். நீதிமன்றத்தில் எங்களது விவாகரத்து தொடர்பான வழக்கு நடைபெற்று வந்தது. இப்போது திடீரென ‘கொரோனா’ பிரச்சனை வந்தமையால், விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.