டான் பாஸ்க்கோவில் விநாயகர் சதுர்த்தி – ஒரே விஷயத்தை மாற்றி மாற்றி சொன்ன YGM & மதுவந்தி. நெட்டிசன்கள் சும்மா இருப்பாங்களா ? வீடியோவ பாருங்க.

0
6074
madhu
- Advertisement -

சென்னை கேகே நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் முதுநிலை மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மாணவிகளுகளிடம் ஆபாசமாக நடந்து கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து 40-க்கும் மேற்பட்ட மாணவிகள் ராஜகோபாலன் மீது புகாரளித்துள்ளனர். புகாரின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ள ராஜகோபாலன் மீது 5 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் விவாதத்தை உண்டாக்கியுள்ளது. பல்வேறு மாணவிகள் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் குறித்துப் பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர்.

-விளம்பரம்-

இந்த விவகாரம் துவங்கிய நாளில் இருந்தே ஒய் கி மகேந்திரனும் அவரது குடும்பத்தினரும் சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றனர். அதிலும் இந்த விவகாரம் குறித்து மதுவந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில்,  ஒரு தனிப்பட்ட நபர் செய்த விஷயம் என்று தான் புகார் வந்துள்ளது.ஆனால், ஒட்டுமொத்தமாக சமூக வலைதளங்களில் பள்ளியையே தவறாக எழுதுகிறார்கள்.என் பாட்டி திருமதி ஒய்ஜிபி ரத்தம் சிந்தி, வியர்வை சிந்தி உழைத்து வளர்த்துவிட்ட மிகப்பெரிய கல்விக்கூடம் இது.

இதையும் பாருங்க : அட, இமானுக்கு இவ்ளோ பெரிய மகள்கள் இருகாங்களா – வெளியான லேட்டஸ்ட் போட்டோஸ்

- Advertisement -

அவங்க பேருக்கோ, இல்லை இந்த பள்ளியின் மரபுக்கோ எந்த கலங்கமும் வரக்கூடாது. அப்படி வந்தால் நாங்கள் பார்த்துகிட்டு சும்மா இருக்க மாட்டோம் என்று கூறி இருந்தது பலரின் கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் ஒய் ஜி மகேந்திரன், மதுவந்தி ஆகியோர் பேசிய பழைய வீடியோக்களை எல்லாம் தோண்டி எடுத்து ட்ரோல் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ஒய் ஜி மகேந்திரன், டான் பாஸ்க்கோ பள்ளியில் படித்த போது விநாயகர் சதுர்த்தி கொண்டாடியதை பற்றி இருவரும் பேசியுள்ளார்கள். ஆனால், ஒரே சம்பத்தை இருவரும் மாறி மாறி கூறியுள்ளது தான் தற்போது பலராலும் கேலி செய்யப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் மதுவந்தி பேசிய போது, சிறு வயதில் தனது தந்தை டான் பாஸ்க்கோ பள்ளியில் படித்த போது விநாயகர் சதுர்த்தி கொண்டாடினார்.

-விளம்பரம்-

அப்போது விநாயகர் சிலையை வைத்து பூஜை செய்தார். இதனால் அவரை சஸ்பென்ட் செய்தனர். இந்து மதிப்புகளையும் இந்து கொள்கைகளையும் கற்றுக்கொடுக்க ஏன் ஒரு இந்து பள்ளி இருக்க கூடாது என்று தான் PSBB பள்ளியை ஆரம்பித்தார் என்று கூறியுள்ளார். ஆனால், இதே விஷயத்தை பற்றி கூறியுள்ள ஒய் ஜி மகேந்திரன், நாங்கள் டான் பாஸ்க்கோ பள்ளியில் படிக்கும் போது கிறிஸ்துவ பள்ளியில் படிக்கிறோம் என்ற எண்ணமே இருந்தது இல்லை.

இந்தியாவில் மதச்சார்பற்ற பள்ளி இருக்கிறது என்றால் அது டான் பாஸ்க்கோ தான். அதே போல மதுவந்தி சொன்ன விநாயகர் சதுர்த்தி கதை பற்றி ஒய் ஜி மகேந்திரன் பேசியுள்ளது, எங்களை மன்னித்து, அதன் பின்னர் எங்கள் மீது எந்த ஒரு பிளாக் மார்க்கும் சொல்லாமல் இருந்தனர், அது தான் டான் பாஸ்க்கோ என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவ, ஒரே விஷயத்தை அப்பாவும் மகளும் மாற்றி மாற்றி சொல்கிறேன், ஒருவேளை பாபநாசம் படம் பாக்கல போல என்று கேலி செய்து வருகின்றனர்.

Advertisement