‘விசுவாசம்’ படத்தில் நான் நடிக்கவில்லை.! ஓப்பனாக பேசிய பிரபல நடிகர்.! புகைப்படம் இதோ

0
382

இயக்குனர் சிவா மற்றும் அஜித் கூட்டணியில் உறவாகி வரும் “விசுவாசம்” படம் தான் அஜித் ரசிகர்கள் மத்தியில் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது. இந்த படத்தில் அஜித்தின் “வேதாளம் ” படத்தில் நடித்த வில்லன் நடிகர் கபீர் சிங் நடித்துள்ளார் என்ற தகவல் குறித்து கபீர் துஹான் சிங்கே விளக்கமித்துள்ளார்.

kabir

தமிழில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான “வேதாளம் ” படத்தில் வில்லன் நடிகராக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சியமானவர் நடிகர் கபீர் துஹான் சிங். ஹரியானா மாநிலத்தை சேர்ந்த இவர் தெலுங்கில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான “ஜில்” என்ற படத்தில் வில்லன் நடிகராக அறிமுகமானார்.

அதன் பின்னர் தெலுங்கில் பல படங்களில் வில்லன் நடிகராக நடித்த இவர் தமிழில் வேதாளம், ரெக்க போன்ற படங்களிலும் வில்லனாக நடித்துள்ளார். இந்நிலையில் அஜித் நடித்து வரும் “விசுவாசம் ” படத்திலும் இவர் வில்லனாக நடித்துள்ளார் என்ற சில தகவல்கள் வெளியாகி இருந்தன.

Ajith

இதுகுறித்து சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள நடிகர் கபீர் துஹான் சிங் “என் இனிய நண்பர்கள்.நான் விஸ்வசம் ( அஜித் சார் படம்) படத்தில் நடிக்கவில்லை. நான் தற்பொழுது காஞ்சனா 4 மற்றும் நடிகர் சித்தார்த் உடன் நடிக்கிறேன். நன்றி அன்புடன்,கபிர்” என்று தமிழிலே பதிவிட்டுள்ளார்.