நடிகர் மற்றும் தா.வெ.க தலைவர் விஜய் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்து முடிந்த பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளை நே ரில் சந்தித்து ஊக்கத் தொகை வழங்கும் விழாவை பற்றிய தகவல்கள்தான் இப்போது வைரலாகியுள்ளது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் வசூலில் சாதனையும் செய்து வருகிறது. இந்நிலையில்தான் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கி தளபதி விஜய் அரசியல் வாழ்க்கையில் இணைந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து சமீபத்தில் நடிகர் விஜய், “என்னை பொறுத்தவரையில் அரசியல் என்பது இன்னொரு தொழில் மட்டுமல்ல. அது மக்களுக்கு செய்யும் புனிதமான சேவை. கட்சி நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்காமல், நான் ஏற்கனவே கமிட் செய்துள்ள படங்களை முடித்துவிட்டு பொது சேவைக்காக அரசியலில் முழுமையாக ஈடுபட விரும்புகிறேன்” என்று அறிவித்திருந்தார்.
ஊக்கத்தொகை வழங்குதல்:
கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழும் ஊக்கத் தொகையும் நடிகர் விஜய் வழங்கினார். அந்த விழாவில் சுமார் 1500 மாணவ மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டும் விழா :
அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றுகளும், கடந்த வருடம் போல் ஊக்கத் தொகையும் வழங்க நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் முடிவு செய்துள்ளார். இந்த நிகழ்வினை இந்த ஆண்டு இரண்டு கட்டங்களாக நடத்த முடிவு செய்துள்ளனர்.
இரண்டு கட்டங்களாக நடத்த முடிவு:
மேலும் இந்த ஆண்டு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு தொகுதி வாரியாக இரண்டு கட்டங்களாக பரிசினை வழங்க உள்ளனர். முதல் கட்டமாக வரும் 28-ம் தேதி திருவான்மியூரில் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது. அதில் 21 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும், இரண்டாம் கட்டமாக அடுத்த மாதம் 3 ஆம் தேதி 19 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் மற்றும் ஊக்க தொகையை விஜய் வழங்க உள்ளார்.
Thalaivar @actorvijay Sir.!@tvkvijayhq @TVMIoffl @Jagadishbliss @RIAZtheboss pic.twitter.com/24XLTXJCcj
— N Anand (@BussyAnand) June 10, 2024
பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்:
இது தொடர்பாக தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் 2024 ஆம் ஆண்டு நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள தொகுதி வாரியாக பெற்ற மாணவ, மாணவிகளைத் “தமிழக வெற்றிக் கழகம்” சார்பாக பாராட்ட உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு மாணவர்கள் அதிக நேரம் காத்திருந்த நிலையில் இந்த ஆண்டு இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.