தமிழ் பெண்கள் யாரிடமும் எதற்காகவும் தோற்கக்கூடாது.! இந்த 3 பேர் ஜெய்க்கனும்..! பிரபல நடிகை அதிரடி.!

0
246
Bigg-boss

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி வாரத்தை நெருங்கியுள்ளது கடந்த வாரம் பாலாஜி மற்றும் யாஷிகா வெளியேறியதையடுத்து இறுதி போட்டிக்கும் ஜனனி, ரித்விகா, விஜயலக்ஷ்மி, ஐஸ்வர்யா ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியின் சீசன் வின்னர் யார் என்பதற்காக கடந்த ஞாயிற்றுகிழமையே வாக்களிப்புகள் துவங்கி விட்டது. பிக் பாஸ் சீசன் 2 வின்னர் யார் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.இறுதிப்போட்டியில் 4 பெண்கள் மட்டுமே மீதுமுள்ளனர் அதில் ஐஸ்வர்யாவை தவிற மற்ற மூவரும் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் தான்.

இந்த நிகழ்ச்சி துவங்கிய நாளில் இருந்தே ரித்விகா, ஜனனி ஆகியோர் இந்த போட்டியில் கண்டிப்பாக தமிழ் பெண்கள் தான் ஜெயிக்க வேண்டும் என்று கூறிவருகின்றனர். இந்நிலையில் நடிகையும், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான ஆர்த்தியும் பிக் பாஸ் போட்டியின் மூன்று இடத்தையும் தமிழ் பெண்கள் தான் பிடிக்க வேண்டும் ட்வீட் செய்துள்ளார்.

இதுகுறித்து சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை ஆர்த்தி, நம் தமிழ் பெண்கள் யாரிடமும் எதற்காகவும் தோற்கக்கூடாது..இவர்களுள் உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு வாக்களியுங்கள் ஆனால் இவர்களுக்கு மட்டுமே!! நம் பெண்களை நாம் முதல் மூன்று வெற்றியாளறாக கொண்டாடுவோம் என்று பதிவிட்டுள்ளார். ஆகமொத்தத்தில் ஐஸ்வர்யா கடைசி இடத்தை கூட பிடிக்ககூடாது என்று விரும்புகிறார் ஆர்த்தி.