‘அப்படி பண்ணா சீழ் தான் பிடிக்கும்’ – தனது தாடை நீளமான காரணம் குறித்து சொன்ன ஆபிராமி கருத்துக்கு மருத்துவர்கள் விளக்கம்.

0
181
- Advertisement -

சமீப காலமாகவே சினிமா துறையில் நடிகைகளை குறித்த உருவ கேலி அதிகமாக பரவிக் கொண்டு வருகிறது. அந்த வகையில் நடிகை அபிராமியின் தாடை நீளமாக இருப்பதாக சோசியல் மீடியாவில் விமர்சனம் எழுந்திருந்தது. இந்நிலையில் தொடர்பாக நடிகை அபிராமி, என்னோட கன்னத்தின் தாடை நீளமாக இருக்கு என்று கிண்டல் செய்திருந்தார்கள். சின்ன வயதில் கொஞ்சி பேசுகிறேன் என்ற பெயரில் என்னுடைய தாடியை பிடித்து இழுத்து இழுத்து பார்த்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

என் தாடை நீளமாக ஆனதற்கு அதுவும் காரணமாக இருக்கலாம் என்று கூறி இருக்கிறார். இப்படி இவர் சொன்னது பலருக்குமே ஆச்சரியத்தை கொடுத்து இருக்கிறது.குழந்தையின் தாடையை பிடித்து இழுத்தால் இப்படி எல்லாம் ஆகுமா? என்ற சந்தேகமும் எழுந்து இருக்கிறது. மேலும், இது தொடர்பாக குழந்தைகள் நல மருத்துவர் கூறியிருப்பது, குழந்தையுடைய தாடையை பிடித்து இழுத்தால் வளரும் என்பது தவறான நம்பிக்கை. அப்படியெல்லாம் செய்தால் தாடை வளராது.

- Advertisement -

மருத்துவர் அளித்த பேட்டி:

நம்முடைய சமூகத்தில் குழந்தை வளர்ப்பில் நிறைய தவறான மூட நம்பிக்கைகள் இருக்கிறது. குழந்தைகளை கொதிக்க கொதிக்க சுடுநீரில் குளிக்க வைக்கிறார்கள். அதே மாதிரி கவிழ்த்து போட்டும் குளிக்க வைக்கிறார்கள். குறிப்பாக, தஞ்சாவூர் பகுதியில் எல்லாம் மூக்கில் எண்ணெய் எல்லாம் ஊத்துகிறார்கள். இன்னும் சில இடத்தில் குழந்தைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுகிறார்கள். இதையெல்லாம் குழந்தை வளர்ப்பில் கண்டிப்பாக செய்யக்கூடாத ஒன்று. முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டியது.

சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கை:

குழந்தையை வெதுவெதுப்பான நீரில் தான் குளிக்க வைக்க வேண்டும். எண்ணெய் வைத்து குளிப்பாட்டும் போதோ, கவிழ்த்து போட்டு குளிக்கும் போதோ, மூக்கில் எண்ணெய் ஊற்றுவதாலோ குழந்தைக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டு லிப்பிட் நிமோனியா ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதனால் இந்த தவறான பழக்க வழக்கங்களை எல்லாம் விட்டு விடுங்கள். அதேபோல் குழந்தையை குளிக்க வைக்கும் போது காதில் மூன்று விரலை வைத்து அழுத்தி தாடை வரைக்கும் இழுப்பார்கள். அப்படி பண்ணினால் தாடை வளரும் என்பது மூடநம்பிக்கை.

-விளம்பரம்-

மருத்துவர் சொன்ன அறிவுரை:

இதனால் தாடை எல்லாம் வளராது. காதுக்குள் இருக்கும் சவ்வில் தான் பாதிப்பு ஏற்பட்டு சீழ் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. தாடை நீட்டாக இருக்க காரணம் ஜெனிடிக்கா வருவது. குடும்பத்தில் அப்பா, தாத்தா யாருக்காவது அந்த பிரச்சனை இருக்கும். அதனால்தான் அது அப்படியே குழந்தைக்கு வருகிறது. கர்ப்பிணி பெண்கள் குழந்தை சிவப்பாக பிறக்க வேண்டும் என்று குங்குமப்பூவை பாலில் போட்டு குடிப்பார்கள். அதெல்லாம் உண்மை கிடையாது. காஷ்மீரிகள் சிவப்பாக இருக்கிறார்கள். அதற்க்காக அந்த ஊர் குங்கும பூவை சாப்பிட்டால் சிவப்பாக பிறக்கிறார்கள் என்பது மூடநம்பிக்கை என்று கூறியிருக்கிறார்.

அபிராமி குறித்த தகவல்:

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தார் அபிராமி. இவர் மலையாள மொழியில் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதன் பின் ‘வானவில்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். மேலும்,இவர் திருமணத்திற்குப் பின்னும் சில படங்களில் நடித்து இருந்தார். சிறிய இடைவெளிக்கு பின் சமீபத்தில் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த ஆர் யூ ஓகே பேபி படத்தில் அபிராமி நடித்து இருந்தார்.

Advertisement