ஆயா, உனக்கு இது தேவையா ? ஐஸ்வர்யா அணிந்து வந்த உடையை கலாய்க்கும் நெட்டிசன்கள். கமெண்ட்ஸ்ஸ பாருங்க.

0
3670
ayswarya
- Advertisement -

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் இப்போது மட்டுமில்லை தமிழ் சினிமாவின் எழுவது என்பது காலகட்டங்களில் இருந்து வாரிசு நடிகர்களின் வருகைகள் இருந்து வந்து கொண்டு தான் இருக்கிறது அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா ஒருவர் இவர் பிரபல நடிகையான லட்சுமியின் மகள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று ஒரு சிலர் இதைப் பற்றி அறியாமல் இருக்கலாம். கடந்த 1985ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘சம்சாரம் அது மின்சாரம்’. இந்த படத்தில் அடக்கமான மருமகளாக நடித்து பெரும்புகழ் பெற்றவர் நடிகை லட்சுமி. இந்த படத்திற்கு முன்னர் பல நூறு படங்கள் நடித்துள்ளார் லட்சுமி.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், என அனைத்து மொழிகளிலும் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் லட்சுமி.

-விளம்பரம்-

பல பிலிம்பேர் விருதுகள், பல கர்நாடக அரசு விருதுகள், கேரளா அரசின் விருது மற்றும் தெலுங்கு சினிமாவின் நந்தி விருது என எண்ணற்ற விருதுகளை பெற்றிருக்கிறார். தனது 19 வயதில் 1969ல் கேரளாவை சேர்ந்த இன்சூரன்ஸ் கம்பெனியை சேர்ந்த பாஸ்கர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த 1971ஆம் ஆண்டு பிறந்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா.பின்னர் 1974ல் முதல் கணவருடன் விவாகரத்து பெற்ற லட்சுமி, 1975ல் மோகன் சர்மா என்ற நடிகரை திருமணம் செய்துகொண்டார். இந்த வாழ்கையும் இவருக்கு கசந்துபோக 5 வருடத்தில் இவரையும் விவாகரத்து செய்துவிட்டார்.

இதையும் பாருங்க : அப்போ உங்க Appல இதான் நடக்குதா ? ருத்ர தாண்டவம் காட்சியால் Oyoவை வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

- Advertisement -

பின்னர் ‘என்னுயிர் கண்ணம்மா’ படத்தில் நடிக்கும்போது அந்த படத்தின் இயக்குனர் கே.எஸ் சிவா சந்திரனுடன் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. மீண்டும் மீண்டும் விவாகரத்து பெற்று தற்போது 67 வயதில் தன் இரண்டு மகள்களுடம் அமைதியாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வசித்து வருகிறார். இதில் மூத்த மகளான ஐஸ்வர்யா தமிழில் 1990ஆம் அறிமுகமானார். அதன் பின்னர் மீரா, உள்ளே வெளியே, எஜமான் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு 1994 ஆம் ஆண்டு தன்வீர் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி இவர்களுக்கு 1995 ஆம் ஆண்டு மகள் பிறந்த நிலையில் 1996 -ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுவிட்டார். விவாகரத்துக்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். தற்போது ஒரு யூடுயூப் சேனல் ஒன்றை கூட நடத்தி வருகிறார். தற்போது இவருக்கு 49 வயதாகிறது.

-விளம்பரம்-

தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர் இந்த நிகழ்ச்சிக்கு குட்டையான கவுன் அணிந்து வந்திருக்கிறார். இதை பார்த்த பலரும் ‘ஆயா, இந்த வயதில் இப்படி ஒரு உடை தேவைதானா’ என்று கலாய்த்து வருகின்றனர் ஏற்கனவே இவர் சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement