ஆரம்ப காலத்தில் வெவ்வேறு பெயர்களில் படங்களில் அறிமுகமாகியுள்ள அமலா பால்.

0
3930
amalapaul
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அமலா பால். இவர் 2009 ஆம் ஆண்டு நீலதமரா என்ற மலையாளப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். பின் இவர் “சிந்து சமவெளி” என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இவர் இந்த படத்திற்கு முன்னாடியே வீரசேகரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். அதற்கு பிறகு மைனா, தெய்வத் திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள், தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி , பசங்க 2, திருட்டுப் பயலே 2, பாஸ்கர் ஒரு ராஸ்கல், ராட்சசன் என அடுத்தடுத்து பல தமிழ் படங்களில் நடித்தார் நடிகை அமலா பால்.

-விளம்பரம்-

மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு நடிகை அமலா பால் நடிப்பில் வெளிவந்த ஆடை படம் மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆடை படத்தில் இவருடைய துணிச்சலான நடிப்பை பார்த்து பலர் பாராட்டியும் விமர்சித்தும் உள்ளார்கள். தற்போது நடிகை அமலா பால் அதோ அந்த பறவை போல என்ற படத்தில் நடித்து உள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் நடிகை அமலா பால் அவர்கள் சிந்து சமவெளி படத்திற்கு முன் தான் நடித்த படங்களில் வெவ்வேறு பெயர்களில் அறிமுகமாகியுள்ளார். தற்போது அந்த படத்தின் புகைப்படங்கள் எல்லாம் சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. நடிகை அமலாபால் அவர்கள் முதன் முதலாக 2010 ஆம் ஆண்டு வெளிவந்த வீரசேகரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். அந்த படத்தில் இவர் அமலா என்று அறிமுகப்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இவர் சிந்து சமவெளி என்ற படத்தில் நடித்தார். பிறகு 2010 ஆம் ஆண்டு வெளிவந்த மைனா படத்தின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படத்தில் இவருடைய பெயரை அனகா என்று அறிமுகப்படுத்தப் பட்டிருந்தது. இதற்கு பிறகு 2013 ஆம் ஆண்டு வெளிவந்த விகடகவி என்ற படத்தில் தான் இவருடைய பெயர் அமலா பால் என்று அறிமுகம் செய்யப்பட்டது. இப்படி ஆரம்பத்தில் இவர் படங்களில் வெவ்வேறு பெயர்களில் நடித்துள்ளார். தற்போது அந்த படங்களின் புகைப்படங்களும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement