28 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் ‘கல்யாண தேன் நிலா ‘ அமலா.

0
8409
amala
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் “நடிகை அமலா” என்று சொன்னால் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். மேலும், நடிகை அமலாவிற்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் இன்னும் வரை உள்ளது கூட சொல்லலாம். அமலா அவர்கள் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து சாதனைப் படைத்தவர். தற்போது நடிகை அமலா அவர்கள் 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க ரீ என்ட்ரி கொடுக்கிறார் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள் பயங்கர குஷியில் உள்ளார்கள். அமலா அவர்கள் 1986 ஆம் ஆண்டு டி.ராஜேந்தரின் “மைதிலி என்னை காதலி” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் என்ட்ரி ஆனார். இந்த ஒரு படத்திலேயே புகழின் உச்சிக்கு சென்றார் என்று கூட சொல்லலாம். மேலும்,இவருடைய நடிப்பில் வெளியான ‘மெல்ல திறந்தது கதவு’ என்ற படம் ரசிகர்கள் மத்தியில் இன்று வரை மறக்க முடியாத நினைவுகளாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

-விளம்பரம்-
Image result for actress amala old photos"

இவர் தமிழ் சினிமா உலகில் ரஜினி, கமல், விஜயகாந்த், மோகன் என பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார்.கமலஹாசனுடன் ‘வளையோசை கலகலவென’, ரஜினியுடன் ‘வா வா வா அன்பே வா’, மம்முட்டியுடன் ‘கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா’ என்ற மறக்க முடியாத காதல் காவியங்களை நம்மிடம் வழங்கி விட்டு சென்றவர் நடிகை அமலா. இந்த பாடல்கள் எல்லாம் இன்றைய இளைஞர்கள் மனதில் கூட நீங்காத இடம் பிடித்த பாடல்கள் ஆகும். அதன் பிறகு நடிகை அமலா தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பிஸியான நடிகையாக வலம் வந்தார். அதையெல்லாம் தாண்டி பாலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்தார்.

இதையும் பாருங்க : சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய பரவை முனியம்மாவின் நிலை. புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்.

- Advertisement -

தெலுங்கில் பிஸியாக இருந்த நடிகை அமலா அவர்கள் ‘உதயம்’ உட்பட மூன்று படங்களில் நாகார்ஜுனாவுடன் ஜோடியாக நடித்தார். பின் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டு 1992 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். மேலும்,திருமணத்திற்கு பிறகு நடிகை அமலா திரையுலக வாழ்கை விட்டு விலகி இருந்தார். தற்போது இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள். இவர்கள் இருவரும் தெலுங்கில் பிரபலமான நடிகர்கள் ஆவர். மேலும்,அமலா அவர்கள் குடும்ப வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்தி வந்தார். பின் அமலா அவர்கள் பிள்ளைகள் வளர்ந்த பின்னால் சினிமா துறைக்கு என்ட்ரி கொடுக்கலாம் என்று முடிவு செய்துவிட்டாராம். இதனைத்தொடர்ந்து அமலா அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னால் தெலுங்கில் வெளியான சூப்பர் ஹிட் படமான ‘மனம்’ படத்தில் ரி-என்ட்ரி கொடுத்தார்.

Image result for actress amala"
Image result for actress amala"

அந்த படத்தில் அவர்கள் ஒட்டு மொத்த குடும்பமே நடித்திருந்தது என்று கூட சொல்லலாம்.தமிழ் சினிமா உலகில் பொருத்தவரை 1991 ஆம் ஆண்டு இயக்குனர் பாசில் இயக்கத்தில் வெளிவந்த ‘கற்பூர முல்லை’ திரைப்படமே இவருடைய கடைசி படமாக அமைந்தது. சில வருடங்களுக்கு பிறகு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூட இவர் தொகுத்து வழங்குபவராக களமிறங்கி இருந்தார். ஆனால், அந்த அளவிற்கு இவர் பிரபலமாகவில்லை. இப்படி போய்க்கொண்டிருக்கும் போது அமலா அவர்கள் தற்போது 28 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் மீண்டும் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தயாரிக்க இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

-விளம்பரம்-

இது சம்பந்தமாக பிரபு அவர்கள் கூறியது, இந்த படத்தின் இயக்குனர் கார்த்திக் அவர்கள் கதை சொன்னபோது எனக்கு இந்த கதாபாத்திரத்திற்கு நடிகை அமலா தான் பொருத்தமாக இருப்பார் என்று எனக்கு தோன்றியது. அதற்கு பிறகு நடிகை அமலா அவர்களை நேரில் சந்தித்து கதையைச் சொல்லினோம்.
இந்தப் படத்தின் கதையை கேட்டவுடன் நடிகை அமலா அவர்கள் உற்சாகமாகி விட்டார். மேலும், இந்த படத்தில் நிச்சயமாக நான் கேட்கிறேன் எனவும் உறுதியளித்தார் என்று கூறினார். மேலும், இந்த படம் தமிழ் திரையுலகில் நிச்சயம் வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement