தான் ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற காரணத்தை கூறி இருக்கிறார் ஆண்ட்ரியா. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக விளங்கி வருபவர் நடிகை ஆண்ட்ரியா தமிழ்த் திரையுலகில் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக தனது சினிமா பயணத்தை தொடர்ந்து வருகிறார் நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா. முதலில் இவர் பின்னணி குரல் கொடுக்கும் நடிகையாக தான் இருந்தார். அதற்கு பின்னர் தான் சினிமாவில் நடிகையாக மாறினார்.அதுமட்டும் இல்லைங்க பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்களில் மூலம்தான் ஆண்ட்ரியா மக்களிடையே அதிகமாக பேசப்பட்டார்.
ஆயிரத்தில் ஒருவன் படத்தை தொடங்கி வடசென்னை படம் வேறு நடிகை ஆண்ட்ரியா பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் பாடகியாக தான் வலம் வந்து கொண்டிருந்தார். பின்னர் கௌதம் மேனனின் ‘வேட்டையாடு விளையாடு’ என்ற திரைப்படத்தில் பாடியதற்கு பிறகு தான் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அதோடு ஆண்ட்ரியா அவர்கள் மங்காத்தா, விஸ்வரூபம், வடசென்னை போன்ற பல சூப்பர் ஹிட் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.
திருமணம் குறித்து ஆண்ட்ரியா :
ஆண்ட்ரியாவிற்கு தற்போது 36 வயது ஆகிறது. ஆனாலும், இன்னமும் இவர் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாக தான் இருந்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஆண்ட்ரியாவிடம் உங்கள் திருமணம் எப்போது என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஆண்ட்ரியா ‘“நானே கேட்குறேனே, ‘ஆண்ட்ரியாவுக்கு எப்போ கல்யாணம்?’ ஆனா, என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு யாரும் கேட்க மாட்டேங்கிறாங்க. கல்யாணம் பண்ணிக்கணும்கிறதுக்காக ஒருத்தரைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது. self made women எவ்வளவு பார்த்துட்டு வந்திருப்பாங்க.
சீரழித்த அரசியல் வாதி ? :
ஒருத்தரைக் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்னா அவங்க வொர்த்தா இருக்கணும். அதுதான் ரொம்ப முக்கியம்.”’ இப்படி கலகலப்பாக போய்க்கொண்டு இருக்கும் ஆண்ட்ரியா கடந்த மாதங்களுக்கு முன்னர் பிரபல ஒருவரால் தனது வாழ்க்கை சீரழிந்து விட்டது கூறியதாக செய்திகள் பரவியது. அதில், அரசியல்வாதி நபருடன் உடல்ரீதியாக தொடர்பு வைத்திருந்தேன். அவரால் நான் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானேன். அதனால் சிறிது காலம் நான் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு இருந்தேன் என பகிரங்கமான பேட்டியில் கூறியிருந்ததாக செய்திகள் பரபரப்பாக பரவியது.
ஆண்ட்ரியா எழுதிய புத்தகம் :
இதனை தொடர்ந்து ரசிகர்கள் அவர் யார்? யார்? என்ற பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதற்கான பதிலை நான் எழுதிய “ப்ரோக்கன் விங்ஸ்” புத்தகத்தில் அந்த நபரின் பெயரை குறிப்பிட்டு உள்ளேன் என்று ஆண்ட்ரியா கூறி இருந்தார். பேட்டி ஒன்றில் விளக்கமளித்துள்ள ஆண்ட்ரியா, நான் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது என்னை ஒரு அரசியல்வாதி ஒருவர் சீரழித்து விட்டதாக கூறியதாக பேசப்பட்டு வருகிறது. ஆனால். உண்மையில் நான் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில் எந்த பத்திரிக்கையாளரும் கிடையாது. என் வாழ்க்கை பற்றிய சில விஷயங்களை வெளிப்படையாக பேசினேன்.
ஆண்ட்ரியா விளக்கம் :
மேலும் நான் வெளியிடுவதாக இருந்த புத்தகத்தில் அந்த நபரின் பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும் கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் அந்த நிகழ்ச்சியின் போது அந்த புத்தகத்தில் இருந்த ஒரு poem ஐ தான் நான் படித்தேன். அப்போது ஒரு சிலர் அதைப் பற்றி என்னிடம் கேள்வி கேட்டார்கள். நான் என்னுடைய மோசமான ஒரு காதல் பற்றிய கவிதை அது மேலும் 10 வருடங்களுக்கு முன் இருந்த காதல்தான் என்றும் , பத்து வருடத்திற்கு முன்னால் அந்த கவிதையை நான் எழுதி இருந்தேன் என்று கூறி இருந்தேன். ஆனால், அதன்பின்னர் நான் பேசியதாக கூறப்படும் அனைத்தும் தவறாக சேர்க்கப்பட்டுள்ளது என்று கூறி இருந்தார்.