என் தங்கச்சிக்கு கல்யாணம் ஆகிடுச்சு – ஆண்ட்ரியா பகிர்ந்த Happy போட்டோஸ்.

0
424
andrea
- Advertisement -

ஆண்ட்ரியாவின் தங்கைக்கு திருமணமாகி உள்ள தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து நடிகையாக மாறியவர் ஒரு சிலர் மட்டுமே. அந்த லிஸ்டில் தற்போது கலக்கிக் கொண்டு இருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக ஆண்ட்ரியா திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிகை மட்டுமல்லாமல் சிறந்த பாடகியும் ஆவார். இவர் தமிழ்த் திரையுலகில் பல ஆண்டுகளாக தனது சினிமா பயணத்தை தொடர்ந்து வருகிறார். முதலில் இவர் பின்னணி குரல் கொடுக்கும் நடிகையாக தான் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

அதற்கு பின்னர் தான் ஆண்ட்ரியா சினிமாவில் நடிகையாக மாறினார். மேலும், இவர் சரத்குமாரின் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் தான் நடிகையானார். அந்த படத்தை தொடர்ந்து இவர் ஆயிரத்தில் ஒருவன், வடசென்னை, மங்காத்தா, விஸ்வரூபம் என பல திரைப்படங்களின் மூலம் மக்களிடையே அதிகமாக பேசப்பட்டார். பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்த ஆண்ட்ரியா ஒரு சில படங்களில் வில்லியாக நடித்து தனது நடிப்பை நிரூபித்து இருந்தார்.

- Advertisement -

ஆண்ட்ரியா நடிக்கும் படங்கள்:

சமீபத்தில் தெலுங்கில் வெளியான ‘புஷ்பா’ படத்தில் இவர் பாடிய ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் வேற லெவலில் ஹிட் அடித்தது. சொல்லப்போனால் தெலுங்கு பாடலை விட தமிழ் பாடல் தான் மாபெரும் ஹிட் அடித்தது என்று கூறப்படுகிறது. இறுதியாக இவர் விஜய்யின் மாஸ்டர், அரண்மனை 3 போன்ற படத்தில் நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து நோ என்ட்ரி, வட்டம், மாளிகை, கா போன்ற பல்வேறு படங்களில் ஆண்ட்ரியா நடித்து வருகிறார்.

பிசாசு 2:

அதுமட்டும் இல்லாமல் தற்போது நடிகை ஆண்ட்ரியா அவர்கள் பிசாசு 2 என்கிற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தை மிஸ்கின் இயக்கி இருக்கிறார். இந்த பிசாசு 2 படத்தை ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் முருகானந்தம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்து இருக்கிறார். மேலும், கௌரவ தோற்றத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் இந்த படத்தில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

சோசியல் மீடியாவில் ஆண்ட்ரியா:

இந்த படத்தின் ரிலீஸ் குறித்த ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் முதன்முறையாக ஆண்ட்ரியா சொந்த குரலில் டப்பிங் செய்து இருக்கிறார். இந்த படத்தின் மூலம் அவருடைய திரைப்பயணம் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, ஆண்ட்ரியா எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார். இவரை இன்ஸ்டாவில் 2.7 மில்லியன் நபர்கள் பாலோ செய்கிறார்கள். இந்த நிலையில் ஆண்ட்ரியா தன்னுடைய சோசியல் மீடியாவில் திருமண புகைப்படங்களை பதிவு செய்கிறார்.

ஆண்ட்ரியா தங்கையின் திருமணம்:

அதாவது, ஆண்ட்ரியா தங்கை நாடியாவிற்கு திருமணம் நடைபெற்றிருக்கிறது. நாடியா பெல்ஜியத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது இவர் செட்ரிக் என்பவரை காதலித்து வந்தார். பின் பெற்றோர்கள் சம்மதத்துடன் தன் காதலன் செட்ரிக்கை நாடியா திருமணம் செய்து கொண்டிருக்கிறார். நாடியா திருமணத்திற்காக ஆண்ட்ரியாவும், அவருடைய பெற்றோர்களும் ஐரோப்பாவிற்கு சென்றிருக்கிறார்கள். ஆண்ட்ரியாவின் தங்கை திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.

Advertisement