தல அஜித்தின் ரீல் மகளுக்கு அவார்ட்டா. வைரலாகும் புகைப்படம்…

0
3335
- Advertisement -

தமிழ் சினிமாவில் சமீப காலமாகவே பல்வேறு குழந்தை நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். அதில் சில குழந்தைகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து உள்ளனர். அந்த வகையில் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தற்போது தனெக்கென்ற ரசிகர் படையை சேர்த்தவர் நடிகை அனிகா சுரேந்தர். நடிகை அனிகா அவர்கள் 2010 ஆம் ஆண்டு வெளி வந்த கத திருடனும் என மலையாள மொழி திரைப் படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமானர். பின் 2015-ம் ஆண்டு அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்து மகத்தான வெற்றி கொடுத்த என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அனிகா சுரேந்தர் அறிமுகமானார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் தல அஜித்துக்கு மகளாக நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் விஸ்வாசம். இந்த படம் பிளாக் பஸ்டர் அடித்தது. இந்த படம் அப்பா-மகள் இடையேயான கதை. இந்த படத்திலும் நடிகை அனிகா சுரேந்தர் அவர்கள் தல அஜித்துக்கு மகளாக நடித்து இருந்தார். நடிகை அனிகா சுரேந்தர் அவர்கள் மலையாள மொழியில் பத்துக்கும் மேற்பட்ட படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார். அதுவும் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார்.

- Advertisement -

நடிகை அனிகா அவர்கள் மலையாளம், தமிழ் என இரண்டு மொழி படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து மக்களிடையேயும், ரசிகர்களிடையேயும் அதிக ஆதரவை பெற்று வருகிறார். மேலும், நடிகை அனிகா மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழக்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் ‘குயின்’ என்ற வெப் சீரிஸில் சிறு வயது ஜெயலலிதாவாக நடித்து உள்ளார். தற்போது வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் வலிமை படத்தில் நடிகை அனிகா நடித்து வருகிறார் என்ற தகவல் வந்து உள்ளது. வலிமை படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக போய் கொண்டு உள்ளது.

இந்த படத்திலும் நடிகை அனிகா அவர்கள் தல அஜித்திற்கு மகளாக நடிக்க உள்ளார் என்று அனிகாவே சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார். இதனால் தல ரசிகர்கள் அனைவரும் குஷி ஆனார்கள். இந்நிலையில் நடிகை அனிகா அவர்கள் தான் நடித்த படத்திற்காக விருது ஒன்றை வாங்கி உள்ளார். அந்த விருது வாங்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அனிகாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement