பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை குரலுக்கு சொந்தக்காரர் இவரு தான். லைவ் டப்பிங் எப்புடி செய்றார் பாருங்க

0
103083
- Advertisement -

வெள்ளித்திரை, சின்னத்திரை என அனைத்து துறைகளிலும் திரைக்கு முன்னாடி இருக்கும் கலைஞர்களைப் பற்றி தான் நாம் பலரும் அறிந்திருப்போம். ஆனால், இந்த கலைஞர்களுக்கு குரல் கொடுக்கும் டப்பிங் கலைஞர்களைப் பற்றி பலர் அறிந்திருக்க மாட்டார்கள். சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை இருக்கும் நடிகர், நடிகைகளை மக்கள் மத்தியில் பிரபலமடைய செய்வது அவர்களுடைய டப்பிங் கலைஞர்கள் தான். சொல்லப்போனால் நயன்தாரா இந்த அளவிற்கு பிரபலம் ஆனதற்கு இவருடைய டப்பிங் கலைஞர் தீபா என்று கூட சொல்லலாம். அந்த வகையில் சின்னத்திரையில் பல சீரியல் கதாநாயகிகளுக்கு குரல் கொடுத்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் காயத்ரி.

-விளம்பரம்-

தற்போது விஜய் டிவியில் பிரபலமாக போய்க்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் பேசுவது இவர்கள் தான். இவர் 13 வருடங்களாக இந்த டப்பிங் கலைஞராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இவர் சின்னத்திரையில் தன்னுடைய டப்பிங் குரல் அனுபவங்களை குறித்து பேட்டியில் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியது, திருமதி செல்வம் சீரியலில் ராணி என்ற கதாபாத்திரத்தில் பேச ஆரம்பித்தேன். அப்படியே வாணி ராணி, அழகு என பல சீரியல்கள் பேச ஆரம்பிச்சேன். அழகு சீரியலில் பூர்ணா கதாபாத்திரத்திற்கு நான் தான் பேசினேன். அதற்குப் பிறகு எனக்கு குழந்தை பிறந்ததால் அந்த சீரியலில் இருந்து விலகி விட்டேன்.

- Advertisement -

நாகினி சீரியலில் சிவன்யா கதாபாத்திரத்தில் நான் பேசினேன். நாகினி சீரியல் கிளைமாக்ஸ் பேசும் போது நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். மூக்கில் ரத்தம் வந்து பேசவே முடியாத நிலை ஏற்பட்டது. ஏன்னா, சிவன்யா ரொம்ப ஆக்ரோஷமா மாறிடுவாங்க. அப்ப பேசும் போது ரொம்ப கஷ்டப்பட்டு பேசி இருந்தேன். அந்த சீரியல் எனக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. அதை பார்த்த பிறகு தான் எனக்கு நந்தினி சீரியலில் பேச வாய்ப்பு வந்தது. நந்தினி சீரியலில் கங்கா, நந்தினி என்ற இரண்டு கதாபாத்திரங்களுக்கும் நான் தான் பேசுனேன். விஜய் டிவியில் நான் முதன் முதலாக கனவு காணுங்கள் சீரியல்ல பேசினேன்.

அதற்குப் பிறகு மதுர, பிரிவோம் சந்திப்போம் என்று பல சீரியலில் பேசினேன். எனக்கு என் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது பிரிவோம் சந்திப்போம் சீரியல் தான். ஏன்னா, அதற்கு முன்னாடி எல்லாம் சின்ன பசங்களுக்கு தான் குரல் கொடுத்து பேசினேன். அந்த சிறிய மூலம் தான் எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதற்குப் பிறகு தொடர்ந்து என்னை சீரியலில் பேச அழைத்தார்கள். ராஜா ராணி சீரியலில் செம்பா கதாபாத்திரம், சரவணன் மீனாட்சியில் முத்தழகு கதாபாத்திரம்,பாலிமர் டிவியில் வந்த உள்ளம் கொள்ளை போகுதடா சீரியலில் பிரியா கதாபாத்திரத்தில் என பல சீரியல்களில் பேசினேன். சொல்லப்போனால் உள்ளம் கொள்ளை போகுதடா சீரியலுக்கும், என்னோட லைப்க்கும் ஒரு கனெக்ஷன் இருக்கு.

-விளம்பரம்-

நாங்க லவ் மேரேஜ் தான். என் கணவர் வீட்ல போயி லவ் பண்றேன்னு சொன்னாரு. அதற்காக வீட்டில் ஒத்துக் கொள்ளவில்லை. பின் அவர் சினிமா டப்பிங் கலைஞர் என்று சொன்னார். அவங்க அம்மா யாருக்கு பேசறாங்க என்று கேட்டார். இவர் உள்ளம் கொள்ளை போகுதடா சீரியலில் ப்ரியாவுக்கு என்று சொன்னார். உடனே அந்த பொண்ணு ஓகே என்று அவங்க அம்மா சொல்லிட்டாங்க. அதோட எனக்கு அந்த சீரியல் மூலம் தான் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக போய்க்கொண்டு இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்ல முல்லை கதாபாத்திரத்திற்கு நான் தான் பேசிட்டு இருக்கேன். இந்த சீரியல் மூலம் எனக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து உள்ளது. சீரியல் மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் சில படங்களில் பேசி இருக்கேன் என்று கூறினார்.

Advertisement