தமிழ் மொழியில் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி இருந்த சிறை படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் அனிஷ்மா. இந்த படமும் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தார். இதை தொடர்ந்து இவருடைய நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் இடம் யூத். இந்த படத்தை கென் இயக்கி நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் கென் கருணாஸ். இவர் யூத் என்ற படத்தில், ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்.இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். இந்த படம் மார்ச் 19ஆம் தேதி வெளியாகி இருக்கிறது. அதோடு இந்த படத்தின் மூலம் பல அறிமுக நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் சினிமாவில் அறிமுகமாக இருப்பதால் பலருக்குமே இந்த படம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
யூத் படம்:
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இந்த படத்தில் அனிஸ்மாவின் கதாபாத்திரம் கொண்டாடப்பட்டு இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க நடிகை அனிஷ்மா, சூர்யாவின் தீவிர ரசிகை என்பதை பல பேட்டிகளில் சொல்லி இருக்கிறார். இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு தன்னுடைய ஹீரோ,ஆதர்ச நாயகனை நேரில் சந்தித்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து அனிஷ்மா தன்னுடைய நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அனிஷ்மா பதிவு:
அதில் அவர், 2005 ஆம் ஆண்டு முதல் என்னை வெட்கப்பட வைத்தவர் சூர்யா. பள்ளிக்கு செல்லும் முன்பே தினமும் காலையில் சுட்டும் விழி சுடரே பாடலை பார்த்துவிட்டு தான் செல்வேன். அவருடைய புகைப்படங்களை எல்லாம் என்னுடைய வீட்டு சுவர்களில் ஒட்டி வைத்திருந்தேன். ஒரு சிறந்த நடிகராகவும் நல்ல மனிதராகவும் அவரை நான் எப்போதுமே வியந்து பார்ப்பேன்.
View this post on InstagramA post shared by Tamil Galatta Updates (@tamilgalattaupdates)
சூர்யா பற்றி சொன்னது:
ஒரு வழியாக அவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துவிட்டது. அந்த சந்திப்பின் போது அவர் அன்பாக வரவேற்று விசாரித்தார். திரை பயணம் தற்போதைய செயல்பாடுகள் எல்லாம் கேட்டு வாழ்த்துக்களை சொன்னார். சூர்யா போன்ற ஒரு பெரிய நட்சத்திரம் என்னிடம் காட்டிய எளிமையும் கனிவும் என்னை ரொம்பவே வியக்க வைத்திருக்கிறது என்று கூறி தன்னுடைய கனவு நனவாகி இருக்கிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.






