கைகூடாத காதல் – அஞ்சலிக்கு விரைவில் திருமணம் ? மாப்பிள்ளை யார் தெரியுமா ?

0
1222

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அஞ்சலி. இவர் சினிமா உலகிற்கு வருவதற்கு முன்பே விளம்பர படங்களில் தான் நடித்துக் கொண்டிருந்தார். அதற்கு பிறகு தான் இவருக்கு 2007 ஆம் ஆண்டு இயக்குனர் ராம் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளி வந்த கற்றது தமிழ் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் இவர் மிக சிறப்பாக நடித்திருந்தார். மேலும், நடிகை அஞ்சலி முதல் படத்திலேயே மக்கள் மனதில் பிரபலமானார் என்று சொல்லலாம். நடிகை அஞ்சலி கொடுக்கும் கதாபாத்திரங்களில் திறமையாக நடிக்க கூடியவர்.

Jai-Anjali: Did Jai-Anjali confirm their relationship? | Tamil Movie News -  Times of India

அதற்கு பிறகு 2010 ஆம் ஆண்டு அங்காடி தெரு என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் இவருடைய சினிமா உலகிற்கு தூக்கி விட்டது என்று சொல்லலாம். அதற்கு பிறகு தொடர்ந்து இவர் எங்கேயும் எப்போதும், கலகலப்பு, மங்காத்தா, ரெட்டைசுழி, சேட்டை, வத்திக்குச்சி, இறைவி, மாப்பிள்ளை சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார். இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு மொழிப் படங்களிலும் நடித்து உள்ளார்.

- Advertisement -

நடிகை அஞ்சலிக்கும், நடிகர் ஜெய்க்கும் இடையே காதல் இருக்கிறது என்று பல கிசுகிசுக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இது பற்றி ஜெய் ஒரு பேட்டியில் கூறும்போது, ‘நானும், அஞ்சலியும் நெருங்கி பழகுவது உண்மைதான். எங்கள் இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருக்கிறது. அதை எப்படி சொல்லவென்று தெரியவில்லை. எனக்கு அஞ்சலியையும் அஞ்சலிக்கு என்னையும் பிடித்திருக்கிறது’ என்று கூறியிருந்தார்.

Anjali on Twitter: "Wishing you a happiest bdy my dear J ,, god bless u  with more happiness n may all ur wishes come true ,, b as lovely as u are

இருவரும் ஒரே வீட்டில் வசித்துவருவதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், இருவரும் பிரிந்துவிட்டதாக கோடம்பாக்கத்தில் கூறப்பட்டது. அதே போல பேட்டி ஒன்றில் பேசிய அஞ்சலி நான் காதலித்தது உண்மைதான். ஆனால் அந்த காதல் நிறைவேறவில்லை என்றார். அதே போல காதலித்தவர் பெயரை வெளிப்படுத்தவில்லை. இந்த நிலையில் அஞ்சலிக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டதாகவும் விரைவில் அவரது திருமணம் ஐதராபாத்தில் நடக்க உள்ளதாகவும் புதிய தகவல் தெலுங்கு பட உலகில் பரவி வருகிறது. ஆனால், இது குறித்து அஞ்சலி தரப்பில் இதனை உறுதிப் படுத்தவில்லை.

-விளம்பரம்-
Advertisement