நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டியிட இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்து வருகிறார் நடிகை அனுஷ்கா. இன்றும் ரசிகர்களின் கனவு கன்னியாக அனுஷ்கா திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் முதலில் தெலுங்கு திரையுலகில் தான் அறிமுகமாகி இருந்தார்.
அதன் பின் தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான ‘ரெண்டு’ படத்தின் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி பிரபலமானார். அதன் பின்னர் இவர் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என்று தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து இருக்கிறார். மேலும், இவரை இந்திய முழுவதும் பிரபலமாக்கியது ‘பாகுபலி’ படம் தான். இந்த படம் இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய வசூல் சாதனையை செய்திருந்தது. இந்த படத்தின் மூலம் அனுஷ்கா மக்கள் மத்தியில் தேவசேனாகவே பதித்து விட்டார். அதோடு இவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது.
அனுஷ்கா திரைப்பயணம்:
அதன் பின் இவர் நடித்த சில படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை. இதை அடுத்து சில ஆண்டுகள் இவர் படங்களில் நடிக்காமல் இருந்தார். பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ பிறகு படத்தின் மூலம் அனுஷ்கா கம்பேக் கொடுத்திருக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் மகேஷ் பாபு இயக்கி இருந்தார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகளில் வெளியாகி இருக்கிறது.
மீண்டும் கம்பேக் கொடுத்த அனுஷ்கா:
தற்போது இவர் படங்களில் நடிக்க கதைகளை தேர்ந்தெடுத்து வருகிறார். இந்த நிலையில் நடிகை அனுஷ்கா அரசியலுக்கு வர இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் சலசலப்பு ஏற்படுத்தி இருக்கிறது. பவன் கல்யாணி பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி சார்பாக அனுஷ்கா வேட்பாளராக போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அனுஷ்கா அவர்கள் ஜனசேனா கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
அனுஷ்கா அரசியல்:
அதோடு கூடிய விரைவிலேயே இவர் திரை உலகில் இருந்து முழுவதுமாக விலகி அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் ஆந்திர மாநில நகரி தொகுதியில் நடிகை ரோஜா இரண்டு முறை போட்டியிட்டு வெற்றியும் பெற்றிருக்கிறார். தற்போது நகரி தகுதியில் மூன்றாவது முறையாக ரோஜா களம் இறங்கி இருக்கிறார். ரோஜாவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று எதிர் கட்சிகளும் பல வேலைகளை செய்து கொண்டிருக்கின்றது.
ரோஜாவை எதிர்க்கும் அனுஷ்கா:
அதோடு நகரி தொகுதியில் பெரும்பாலும் தமிழர்களுடைய ஓட்டுகள் அதிகம் இருக்கிறது. அனுஷ்காவும் தமிழில் பிரபலமானவர் என்பதால் ரோஜாவை எதிர்த்து தெலுங்கு தேசம் கூட்டணி சார்பில் ஜனசேனா கட்சி சார்பில் வேட்பாளராக அனுஷ்காவை களமிறக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இருந்தாலும், அனுஷ்கா அரசியல் வாழ்க்கை குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.