பல வருட போராட்டத்தின் பின் வெளிவந்த ஆடுஜீவிதம் படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

0
388
- Advertisement -

மலையாள சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் பிரித்திவிராஜ். இவர் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழிலும் நடித்து இருக்கிறார். தமிழிலும் இவருடைய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தற்போது இவருடைய நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி இருக்கும் படம் தான் ஆடு ஜீவிதம். இயக்குனர் பிளஸ்ஸி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் அமலா பால், கோகுல், Jimmy Jean-Louis உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருக்கிறார். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைகளம்:

படத்தில் கதாநாயகன் பிரிதிவிராஜ் அவர்கள் நஜீப் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கு வெளிநாட்டில் வேலை செய்து நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார். இதனால் இவர் தன்னுடைய நண்பருடைய மாமாவின் மூலமாக சவுதி அரேபியாவில் வேலை செய்ய வாய்ப்பு வருகிறது. உதவியாளர் வேலைக்காக தான் இவர் அங்கு செல்கிறார். ஆனால், அங்கு போன பின்பு தான் ஹீரோவுக்கு பேரதிர்ச்சி காத்து இருக்கிறது.

- Advertisement -

அங்கு கொத்தடிமை வேலைக்கு தன்னை எடுத்திருப்பது தெரிய வந்திருக்கிறது. பின் இந்த வேலைக்கு தான் வரவில்லை, என்னை விட்டு விடுங்கள் என்று பிரித்விராஜ் கெஞ்சி கதறி அழுத்திருக்கிறார். இருந்தாலும், அவரை விடவில்லை. என்ன செய்வது என்று புரியாமல் பிரிதிவிராஜ் பல கொடுமைகளை அனுபவித்திருக்கிறார். மேலும், பலமுறை தப்பிக்கவும் முயற்சி செய்தார். ஆனால், அவரால் தப்பிக்க முடியாமல் முதலாளி இடம் மாட்டிக் கொள்கிறார்.

இதனால் பல வருடங்கள் சவுதி அரேபியாவிலேயே பிரித்விராஜ் மாட்டிக் கொள்கிறார். இறுதியில் என்ன நடந்தது? பிரிதிவிராஜ் அங்கிருந்து தப்பித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. ஆடு ஜீவிதம் என்ற நாவலை மையமாக வைத்து இந்த படத்தை இயக்குனர் கொடுத்திருக்கிறார். மிக அற்புதமாக இயக்குனர் கதையை எடுத்திருக்கிறார். ஒருவர் வெளிநாட்டுகளில் வேலைக்கு சென்று எப்படி எல்லாம் கொடுமைகளை அனுபவிக்கிறார்கள் என்பதை சிறப்பாக காண்பித்திருக்கிறார்.

-விளம்பரம்-

படத்தில் பிரித்திவிராஜ் நடித்து இருக்கிறார் என்பதை விட வாழ்ந்து இருக்கிறார் என்றே சொல்லலாம். கொத்தடிமை வாழ்க்கை, பாலைவனத்தில் தண்ணீருக்காக ஏங்கும் காட்சிகள், சொந்த மண்ணுக்கு திரும்ப நினைக்கும் உணர்வுகளை எல்லாம் சிறப்பாக காண்பித்திருக்கிறார். அதில் பல காட்சிகள் பார்வையாளர்களையே கண்ணீர் வர வைத்திருக்கிறது. சொல்லப்போனால், இதுவரை இல்லாத அளவிற்கு அற்புதமாக நடித்து இருக்கிறார். இவரை அடுத்து அமலாபால் உடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் பெரிதாக இல்லை என்றாலும் அவர் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

மேலும், ஏ ஆர் ரகுமானின் பின்னணி இசை இந்த படத்திற்கு பெரிய பலத்தை கொடுத்திருக்கிறது என்றே சொல்லலாம். அதே போல் ஒளிப்பதிவும், எடிட்டிங் நன்றாக இருக்கிறது. ஆனால், கதையின் வேகம் தான் கொஞ்சம் மெதுவாக நகர்கிறது. விறுவிறுப்பாக கொடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் தவிர மற்றபடி எந்த குறையும் இல்லை. ஆக மொத்தம் ஆடுஜீவிதம் சிறப்பு

நிறை:

பிரித்திவிராஜ் நடிப்பு அருமை

கதைகளம் சிறப்பாக இருக்கிறது

படத்தின் மற்ற நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

படத்திற்கு பின்னணி இசையும் ஒளிப்பதிவும் பக்க பலத்தை கொடுத்திருக்கிறது

இயக்குனர் கதையைக் கொண்டு சென்ற விதம் நன்றாக இருக்கிறது

குறை:

கதை ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை மெதுவாக செல்கிறது

கொஞ்சம் விறுவிறுப்பாக கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்

மொத்தத்தில் ஆடு ஜீவிதம் – மலையாள மொழியின் சிறந்த படைப்பு

Advertisement