விஜய் கட்சியுடன் கூட்டணி – விஜய் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிரடி பேட்டி. இதோ வீடியோ.

0
490
OPSSon
- Advertisement -

விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து பணியாற்ற நாங்கள் தயார் என்று ஓபிஎஸ் மகன் எம் பி ரவீந்திரநாத் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் குறித்த செய்திகள் தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் குறித்த வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

-விளம்பரம்-

மேலும், தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, மற்றும் பாஜக கூட்டணி என்று மூன்று அணிகளும், நாம் தமிழர் கட்சி மற்றும் தனித்து நிற்கிறது. எனவே நான்கு கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. இதில் பாஜக தலைமையில் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், சமத்துவ மக்கள் கட்சி போன்ற பல கட்சிகள் கூட்டணி வைத்திருக்கிறது. தற்போது மும்முரமாக தேர்தல் பிரச்சார வேலைகள் நடைபெறுகிறது.

- Advertisement -

ரவீந்திரநாத் பேட்டி:

இந்த நிலையில் தேனி மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர், ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, நாடாளுமன்ற தேர்தல் சார்பாக ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவரிடம் விஜய் கட்சி ஆரம்பித்தது குறித்து கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர், இந்த ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். விஜய் அரசியலுக்கு வருவது அவருடைய விருப்பம்.

விஜய் கட்சி குறித்து சொன்னது:

அதேபோல் அவர் பல சமூக சேவைகளையும், நலத்திட்டங்களையும் செய்து கொண்டிருக்கிறார். இது நல்ல விஷயம். மக்களுக்காக உதவும் நோக்கில் அவர் அரசியலுக்கு வந்திருப்பது நல்லது தான். அடுத்த கட்ட முயற்சியாக பரிணாம வளர்ச்சியாக அவர் அரசியலுக்கு வருகிறார். தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல பாதையை உருவாக்கித் தருவார் என்றால், அவருடன் இணைந்து செயல்பட நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

விஜய் அரசியல் :

தளபதி விஜய் அவர்கள் சினிமாவை விட்டு முழுவதுமாக விலகி தன்னுடைய அரசியல் பணியை மேற்கொள்ள இருக்கிறார் என்று அறிவித்திருந்தார். தற்போது விஜய் அவர்கள் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினுடைய படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதை அடுத்து இவர் கடைசியாக தளபதி 69 என்ற படத்தில் தான் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை யார் இயக்குவார்கள்? என்று எதிர்பார்ப்பிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தமிழக வெற்றி கழகம்:

அது மட்டும் இல்லாமல் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சியினுடைய வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருவதால் இனி விஜய் அவர்கள் சினிமாவில் நீடிப்பதில்லை என்று தெள்ளத்தெளிவாக தெரிகிறது. மேலும், 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் கட்சி போட்டியிட இருப்பதால் அதற்கான வேலையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். சமீபத்தில் தான் உறுப்பினர்கள் சேர்க்கைக்காக புது செயலியை தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பித்து இருக்கிறது.

Advertisement