இந்திய அதிரடி கிரிக்கெட் வீரரை மணக்கப்போகும் உதயம் Nh4 பட நடிகை.. யார் தெரியுமா..

0
2523
udhayam-Nh4
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் விரைவில் தமிழ் நடிகையை திருமணம் செய்யப் போகிறார் என்ற தகவல் இணையங்களில்வைரலாக பரவி வருகிறது. இந்திய கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கும், நடிகை அஷ்ரிதா ஷெட்டிக்கும் விரைவில் திருமணம் நடக்கபோகிறது. இதனால், வாழ்த்துக்களையும்,பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள். 30 வயதே ஆன மனிஷ் பாண்டே இந்திய கிரிக்கெட் அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளையாடி இருக்கிறார். பெங்களூரை சேர்ந்த இவர் இதுவரை இந்தியாவுக்காக 23 ஒருநாள் போட்டிகளிலும் 31 டி-20 போட்டிகளிலும் விளையாடி உள்ளார். இவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தான் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனவர்.

-விளம்பரம்-
Image result for udhayam nh4 actress

தற்போது மனிஷ் பாண்டே கர்நாடக அணியில் முக்கிய வீரராகவும், ‘விஜய் ஹாசார’ கோப்பைத் தொடருக்காக விளையாடி வருகிறார். கிரிக்கெட் அணியில் நான்கு, ஐந்தாவது இடத்திற்கு தகுதியான நபராக இருப்பார் என களமிறங்கிய மனிஷ் பாண்டே தொடர்ந்து நடந்த கிரிக்கெட் தொடரில் சொதப்பி வந்ததால் அந்த வாய்ப்பை நழுவவிட்டார். மேலும், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்றார். தற்போது டி-20 போட்டிகளிலும் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. மனிஷ் பாண்டே, அஷ்ரிதா ஷெட்டி இவர்கள் இருவரும் சில ஆண்டுகளாவே காதலித்து வருகிறார்கள். ஆனால், இவர்கள் காதல் குறித்து எந்த ஒரு தகவலும் சமூக வலைத்தளங்களிலோ அல்லது ஊடகங்களிலோ தெரிவிக்கவில்லை. ரகசியமாகவே பாதுகாத்து வந்தார்கள்.

இதையும் பாருங்க : மதுமிதாவுக்கு முதன் முறையாக ட்வீட் போட்ட போட்டியாளர்.. அதுவும் இவர் போட்டிருக்காரே.. குவியும் பாராட்டு..

- Advertisement -

தற்போது இவர்கள் காதல் அடுத்த கட்டமான திருமணம் வரை சென்றுள்ளதாகவும், விரைவில் இவர்கள் திருமணம் செய்யப்போகிறார் என்றும் தெரியவந்ததுள்ளது. மேலும், இவர்கள் திருமணம் வருகிற டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் மும்பையில் நடைபெற உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் மும்பையில் நடந்து கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. நடிகை அஷ்ரிதா ஷெட்டி தமிழில் “உதயம் NH4 ,ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், இந்திரஜித், போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தவர். இதைத்தொடர்ந்து ஒரு துளு படத்திலும் நடித்து உள்ளார். மேலும், இவர் நடித்து வரும் ‘நான் தான் சிவா’ படம் கூடிய விரைவில் வரப்போகிறது. இவரும் பெங்களூரை சார்ந்தவர் தான். மேலும், இந்த திருமணம் குறித்த தகவல்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கபடுகிறது.

Image result for manish pandey ashrita shetty

இந்த திருமணத்தில் ஏராளமான கிரிக்கெட் வீரர்களும், திரை பிரபலங்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமணம் மும்பையில் நடப்பதற்கான காரணம் என்னவென்று பார்த்தால் அடுத்தடுத்து விளையாட உள்ள கரீபியன் தீவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற உள்ளதாகவும், அதனால் தான் திருமணத்தை மும்பையிலேயே நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அது மட்டுமில்லாமல் மும்பையில் வைத்தால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் எளிதாக திருமணதிற்கு வருவார்கள் என்ற நோக்கில் திட்டமிட்டு உள்ளார்கள் என கருதப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் திருமணம் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் மும்பையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடக்க உள்ளதாகவும், இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன.மேலும், இந்த திருமணம் இரண்டு மூன்று நாட்கள் நிகழ்ச்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement