பிரபல நடிகை பாபிலோனாவின் சகோதரர் கைது. காரணம் இது தான்.

0
4130
Babilona
- Advertisement -

ரோந்து பணியில் இருந்த போலீசாரை தாக்கியதற்காக பிரபல நடிகையின் சகோதரன் கைது செய்து உள்ளார்கள். தற்போது இந்த தகவல் இணையங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமா உலகில் கவர்ச்சி நடிகையாக பல படங்களில் நடித்தவர் நடிகை பாபிலோனா. இவர் தமிழில் தை பொறந்தாச்சு, என்னம்மா கண்ணு, அசத்தல், என் புருஷன் குழந்தை மாதிரி, வட்டாரம், சிறுவாணி உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர். இதனை தொடர்ந்து இவர் தமிழ், மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் கவர்ச்சி நடிகையாக பல படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-
Image result for babilona brother

- Advertisement -

பிறகு அவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் இல்லாததால் சினிமா துறையை விட்டு விலகி இருந்தார். பின் சென்னையில் தன் தம்பி விக்கி உடன் சாலிகிராமத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் சென்னையில் விருகம்பாக்கம் போலீஸ் உதவி ஆய்வாளர் பழனி, காவலர் சங்கர் ஆகியோர் ரோந்து வாகனத்தில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்கள். பின் சாலிக்கிராமம், தசரதபுரம் எட்டாவது தெரு வழியாக ரோந்து பணியில் போலீசார் வந்து உள்ளார்கள். அப்போது நடிகை பாபிலோனாவின் தம்பி விக்கி என்பவர் குடிபோதையில் அங்கு தகராறு செய்து கொண்டு இருந்தார்.

அங்கு வந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். உடனே குடிபோதையில் இருந்த விக்கி ரோந்து பணியில் வந்த போலீசார் ஷங்கரின் கன்னத்தில் ஓங்கி அறைந்து உள்ளார். இது குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சென்றது. பின் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து போலீசாரை தாக்கியதாக விக்கியை கைது செய்தார்கள். பின் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள். நடிகை பாபிலோனாவின் குடும்பம் அடிக்கடி இந்த மாதிரி கலாட்டாக்களும், சர்ச்சையில் சிக்குவது வழக்கமான ஒன்றாகி விட்டது. இதற்கு முன்பு பாபிலோனாவின் சித்தியான கவர்ச்சி நடிகை மாயா மற்றும் அவரது மகன் பெரிய பிரச்சனை ஏற்படுத்தினார்கள்.

-விளம்பரம்-

நடிகை பாபிலோனாவின் தம்பி விக்கி மீது பல முறை பல சர்ச்சைகளில் மாட்டி உள்ளார். முன்பு கூட ஒரு முறை வடபழனி பகுதியில் குடித்துவிட்டு சாலையில் தகராறு செய்தார். அப்போது அவரை விசாரித்து பிடிக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் நெஞ்சில் ஓங்கிக் குத்தி விட்டு தப்பி சென்றார். பின் ஆள் கடத்தல் என்ற மிகப் பெரிய பிரச்சனையில் சம்பந்தப்பட்டுள்ளார். இப்படி பல தவறுகளை செய்து கொண்டு வருகிறார் விக்கி. அது மட்டும் இல்லாமல் நடிகை பாபிலோனாவின் குடும்பத்தில் உள்ள அனைவரும் இந்த மாதிரி பிரச்சனைகளில் சிக்கி வழக்குகளில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement