2000 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பத்ரி என்ற சூப்பர் ஹிட் படத்தில் நடித்திருந்தார் நடிகை பூமிகா.டெல்லியை சேர்ந்த இவர் முதன் முதலில் யுவகுடு என்ற தெலுகு படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார்.விஜயின் பத்ரி படத்திற்கு பிறகு ரோஜா கூட்டம்,ஜில்லுன்னு ஒரு காதல் என்ற இரு பிரபலமான படங்களில் மட்டுமே நடித்திருந்தார்.தமிழில் பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் தெலுகு மற்றும் ஹிந்தி சினிமாவில் என்னேற்ற படங்களில் நடித்திருகிறார்.
2007 ஆம் ஆண்டு தான் நீண்ட நாட்களாக காதலித்து வந்த பாரத் தாகூர் என்ற யோகா ஆசிரியரை திருமணம் செய்திகொண்டனர்.ஆனால் திருமணத்திற்கு பிறகும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த பூமிகா தமிழ் ரசிகர்களால் முழுவதும் மறக்கப்பட்டார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு 2016 இல் வெளியான தோனி என்ற படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் ரீ என்ட்ரி குடித்த பிறகு பின்னர் தமிழ் ரசிகர்கள் பூமிக்காவை மீண்டும் நினைவு படுத்தினர்.அதன் பிறகு சென்று ஆண்டு வெளியான காலவாடிய பொழுதுகள் என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார் பூமிகா.
நீண்ட இடைவேளைக்கு பிறகு பூமிக்கவின் ரீ என்ட்ரி யை பார்த்த ரசிகர்கள் பூமிகாவா இது என்று ஆச்சர்யபட்டனர்.தற்போதும் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார் பூமிகா. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.