உங்களுக்கும் இப்படி ஆகும் இருங்க – நிறைமாத கர்ப்பமாக இருக்கும் நக்ஷத்ராவை டார்ச்சர் செய்த சைத்ராவிற்கு ரசிகர்கள் கமெண்ட்ஸ்

0
1843
Chaitra
- Advertisement -

நிறைமாத கர்ப்பிணி நக்ஸத்ராவை அவருடைய தோழி டார்ச்சர் செய்திருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி தொடர் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சீரியல் நடிகை நக்ஸத்ரா. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதன் பின் இவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வள்ளி திருமணம் தொடரில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

இந்த சீரியல் நன்றாக சென்று கொண்டிருந்தது. ஆனால், திடீரென்று இந்த சீரியலை முடித்து விட்டார்கள். இதற்கிடையில் நடிகை நக்ஸத்ரா அவர்கள் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் தயாரிப்பு நிர்வாகப் பணிகளை செய்து வந்த விஸ்வநாதன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் அவரச அவரசமாக நடந்தது. பின் ரசிகர்களுக்கு இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள்.

- Advertisement -

நக்ஸத்ரா திருமணம்:

ஆனால், இவர்களுடைய திருமணம் குறித்து நக்ஸத்ராவின் தோழி ஸ்ரீநிதி தவறாக சோசியல் மீடியாவில் செய்திகளை பரப்பி இருந்தார். பின் இது குறித்து நக்ஸத்ராவும் விளக்கம் கொடுத்திருந்தார். மேலும், திருமணத்திற்கு பின் நக்ஸத்ரா தாங்கள் எடுத்த புகைப்படங்களை எல்லாம் சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார். இப்படி ஒரு நிலையில் நக்ஸத்ரா கர்பமாக இருக்கும் தகவலை சமீபத்தில் இணையத்தில் அறிவித்திருந்தார்.

நக்ஸத்ரா கர்ப்பம்:

இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். பின் சில தினங்களுக்கு முன்பு தான் நக்ஸத்ராவுக்கு வளைகாப்பு நடந்திருக்கிறது. இந்த விழாவில் சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் நக்ஸத்ராவின் தோழிகளான ஷபானா, சைத்ரா ரெட்டி, ரேஷ்மா உட்பட பலரும் கலந்துகொண்டு நக்ஸத்ராவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்நிலையில் கர்ப்பமாக இருக்கும் நக்ஸத்ராவை அவருடைய தோழி சைத்ரா ரெட்டி தொல்லை செய்திருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

நக்ஸத்ரா-சைத்ரா ரெட்டி வீடியோ:

அந்த வீடியோவில், நக்ஸத்ரா வயிற்றை சாய்த்துக்கொண்டு கஷ்டப்பட்டு நடக்கிறார். இதை போலவே சைத்ரா ரெட்டி இமிடெட் செய்து கலாய்த்து இருக்கிறார். பின் நக்ஸத்ரா சோபாவில் உட்கார செல்லும்போது அவருக்கு இடம் விடாமல் ஓடி போய் சைத்ரா உட்கார்ந்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் நக்ஸத்ரா பக்கத்தில் உட்கார்ந்து அவரை வெறுப்பேற்றி உணவுப்பொருட்களை சாப்பிட்டு இருக்கிறார். பின் நக்ஸத்ரா கட்டிலில் ஓய்வு எடுக்கலாம் என்று செல்லும்போது சைத்ரா ரெட்டி அங்கும் சென்று இருக்கிறார்.

வைரலாகும் வீடியோ:

அங்கு இருந்த தலகாணிகளை எடுத்து அவர் நக்ஸத்ரா மீது போட்டு இருக்கிறார். இப்படி நக்ஸத்ராவிடம் சைத்ரா செய்து இருக்கும் சேட்டை வீடியோவை தான் தற்போது சைத்ரா ரெட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, உங்கள் தோழி கர்ப்பிணியாக இருக்கும் போது இது எல்லாம் விளையாட்டுக்காக, நக்ஸத்ரா கர்ப்பமாக இருப்பதை பார்த்ததற்கு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று கூறி பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement