தகாத வார்த்தை பேசி தொல்லை.! அட்லீ மீது புகார் அளித்த விஜய் 63 நடிகை.! இவருமா.!

0
944
Atlee
- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் இயக்குனர் அட்லி. மெர்சல் படத்திற்கு பின்னர் இவர் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இயக்குனர் பட்டியலில் சேர்ந்து விட்டார். என்னதான் ஷங்கரின் உதவி இயக்குநராக பணியாற்றி வந்தாலும் இவர் இயக்கி வரும் படங்கள் என்னவோ பெரும்பாலும் காப்பி கதைகளாகத்தான் இருந்து வருகிறது.

-விளம்பரம்-
Shocking: Thalapathy 63 artiste files police complaint against Atlee!

தற்போது இவர் விஜயை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படமும் திருடபட்ட கதை என்று துணை இயக்குனர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார். இதுநாள் வரை இப்படிபட்ட சர்ச்சையில் மட்டும் சிக்கி வந்த அட்லீ மீது துணை நடிகை ஒருவர் புகார் அளித்துள்ளார்.

- Advertisement -

இயக்குனர் அட்லி தற்போது விஜய்யை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் துணை நடிகையாக கிருஷ்ணா தேவி என்பவரும் நடித்து வருகிறார் இவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள அந்த புகாரில், ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் அட்லீயின் திரைப்படத்தில் வேலை பார்க்க வந்தேன். நான் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது அட்லீயும் அவரது உதவியாளர்களும் என்னை தகாத வார்த்தைகள் பேசி வேலை பார்க்க விடாமல் வெளியே அனுப்பி விட்டார்கள். எனவே அட்லீ மற்றும் அவரது உதவியாளர்களை விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். மேலும், படப்பிடிப்பின் போது சுத்தமில்லாத உணவு வழங்கப்பட்டதால் அதை தட்டிக்கேட்ட தன்னை அட்லீ முன்னிலையில் உதவி இயக்குநர் தாக்கினார் ” என்றுகூறியுள்ளார் கிருஷ்ணா தேவி. .

-விளம்பரம்-
Advertisement