சித்தி 2வில் ராதிகாவிற்கு பதில் நான் நடிக்கிறேனா – நடிகை கொடுத்த விளக்கம். அப்போ யார் தான் நடிக்க போறாங்க.

0
868
chithi
- Advertisement -

சித்தி 2 தொடரில் இருந்து ராதிகா வெளியேறியதை அடுத்து ராதிகா கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. தென்னிந்திய சினிமா திரை உலகில் 1980 முதல் 1990 ஆம் ஆண்டு காலகட்டங்களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ராதிகா சரத்குமார். ராதிகா அவர்கள் தமிழ் சினிமாவில் 80களில் இருந்து தொடங்கி இன்று வரை இடைவிடாமல் வெள்ளித்திரை, சின்னத்திரை என மாறி மாறி நடித்து வருகிறார். மேலும், சினிமா துறையில் தனக்கென ஒரு அடையாளத்தையும் உருவாக்கியவர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரஜினி கமல், விஜயகாந்த் என்று பல்வேறு நடிகர்களுடன் நடித்துவிட்டார் ராதிகா.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-167-839x1024.jpg

இவர் பிரபல சன் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணாமலை, வாணி ராணி,செல்வி, அரசி என பல்வேறு தொடர்களில் நடித்து வந்தார். கடைசியாக அவர் சந்திரகுமாரி என்ற சீரியலிலும் நடித்து உள்ளார். ஆனால் ராதிகாவிற்கு மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்தி தந்தது சித்தி சீரியல் தான். இந்த சீரியலிலை ராதிகா சரத்குமார் அவர்களே தயாரித்து இருந்தார். அது மட்டுமில்லாமல் முதல் முறையாக பட்டி தொட்டி எல்லாம் வெற்றி அடைந்த சீரியலும் இது தான்.

- Advertisement -

இன்னும் சொல்லப்போனால் சித்தி சீரியலுக்கு பிறகு தான் ராதிகா அவர்கள் மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலமானர். வெள்ளித்திரையில் சாதித்தவர்களால் சின்னத்திரையிலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்தவர் நடிகை ராதிகா சரத்குமார்.தற்போது 22 வருடங்களுக்கு பிறகு “சித்தி 2” சீரியல் சன் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக போய்க் கொண்டு உள்ள நிலையில் சமீபத்தில் இந்த சீரியலில் இருந்து ராதிகா விலகிவிட்டார்.

சித்தி சீரியலின் ஹிட்டுக்கு ராதிகா தான் ஒரு முக்கிய காரணமாக இருந்தார். தற்போது அவர் விலகியதால் அவருக்கு பதில் யார் வருவார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.. நடிகை ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட ஒரு சிலரின் பெயரும் அக்கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக பேச்சு அடிபட்டது. இதனிடையே நடிகை வரலட்சுமி சரத்குமார் ராதிகாவின் கேரக்டரில் நடிக்க இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. ஆனால்,இதனை வரலக்ஷ்மி மறுத்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement