பிளாட்டாக மாறிய தரிசு நிலத்தை வாங்கி தேவயானி எப்படி மாற்றியுள்ளார் பாருங்க – பாத்தா நீங்களே பாராட்டுவீங்க.

0
855
devaiyani
- Advertisement -

சமீபகாலமாகவே விவசாயத்தில் பல புரட்சிகள், போராட்டங்கள் ஏற்பட்டு வருகிறது. மழையில்லாமல், நகரமயமாக்கல் போன்ற பல்வேறு பிரச்சனைகளால் விவசாயிகளுக்கும், விவசாயத்திலும் பல நஷ்டங்கள் ஏற்பட்டு ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள். இந்த நிகழ்வு அனைவரும் அறிந்த ஒன்று. இதனைத் தொடர்ந்து பெரும்பாலான விவசாயிகள் தங்களுடைய விவசாய நிலங்களை பிளாட் போட்டு விற்க தொடங்கியுள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் ரியல் எஸ்டேட் முதலாளிகள் விவசாய நிலங்களை கூறு போட்டு விற்பனை செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்த நிலையில் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த தேவயானியின் செயல் பாராட்டுக்குரிய வகையில் உள்ளது. நடிகை தேவயானி அவர்கள் ஈரோடு அருகே தனது தோட்டத்துக்கு பக்கத்தில் மனைகளாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்திருந்த பிளாட்களை வாங்கி அதில் விவசாயம் செய்து உள்ளார். நடிகை தேவயானியின் கணவர் இயக்குனர் ராஜகுமாரன். இவர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த சந்திப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்.

இதையும் பாருங்க : தன் மனைவியின் உருவத்தை கேலி செய்த நடிகரை – ஆஸ்கர் மேடையில் அறைவிட்ட வில் ஸ்மித். (அவர் மனைவிக்கு இப்படி ஒரு நோயா ? )

- Advertisement -

தரிசு நிலத்தை வாங்கிய தேவயானி

தேவயானி தம்பதிகள் அடிக்கடி தங்களின் சொந்த ஊருக்கு செல்வார்கள்.மேலும், இவர்கள் அருகிலுள்ள மாத்தூரில் நிலம் வாங்கி விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் அடிக்கடி அவர்கள் ஊருக்கு சென்று தங்கள் விவசாய நிலங்களை குழந்தைகளுடன் பார்த்து வருவார்கள். இந்த நிலையில் அவர்களது தோட்டத்துக்கு அருகே இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தை ஃப்ளாட் ஆக மாற்றியுள்ளனர்.

தோட்டமாக மாறிய போட்டல் காடு :

இதை அறிந்த தேவயானி அந்த நபரிடம் இரண்டு ஏக்கர் வீட்டு மனைகளையும் விலைக்கு வாங்கியுள்ளார். பின் அதை விவசாய நிலமாக மாற்றி தற்போது இரண்டு ஏக்கரில் செண்டுமல்லி பயிரிட்டுள்ளார்.தற்போது அந்த விவசாய நிலம் முழுவதும் செண்டுமல்லி பூத்து குலுங்குகிறது. இதை பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக உள்ளது. தற்போது திருவிழாவுக்காக சொந்த ஊர் வந்த தேவயானி குடும்பத்தினர் தங்களின் மல்லி தோட்டத்தை சுற்றிப் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

-விளம்பரம்-

பகுதி மக்கள் பாராட்டு :

விவசாய நிலங்கள் பிளாட்டுகளாக மாற்றப்பட்டு வரும் நிலையில் நடிகை தேவயானியின் இந்த செயல் குறித்து அப்பகுதி விவசாயிகள் பாராட்டி வருகின்றனர். தற்போது தேவையானி புதுப்புது அர்த்தங்கள் தொடரில் நடித்து வருகிறார். ஜீ தமிழ் சேனலில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கிய சீரியல் புதுப்புது அர்த்தங்கள். இது திங்கள் முதல் சனி வரை இரவு 8.30-க்கு ஒளிபரப்பாகி வருகிறது.

தேவையானி நடித்து வரும் தொடர் :

லட்சுமி என்ற கேரக்டரில் நடிகை தேவயானி, ஹரி கிருஷ்ணண் என்ற கேரக்டரில் பிரபல சீரியல் நடிகர் அபிஷேக் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அதே போல் வீஜே பார்வதி, பவித்ரா ரோலில் இந்த சீரியலில் தேவயானிமருமகளாக நடித்து வருகிறார். கதைப்படி இப்போது பவி, குட்டி மீது கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இவர்களை எப்படியாவது சேர்த்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் லட்சுமி அம்மா(தேவயானி) போராடி வருகிறார்.

Advertisement