தன் மனைவியின் உருவத்தை கேலி செய்த நடிகரை – ஆஸ்கர் மேடையில் அறைவிட்ட வில் ஸ்மித். (அவர் மனைவிக்கு இப்படி ஒரு நோயா ? )

0
510
wilsmith
- Advertisement -

கடந்த ஆண்டில் சாதனை செய்த படங்களின் கலைஞர்களை பாராட்டும் விதமாக ஆஸ்கர் விருது விழா நடக்கிறது. அந்த வகையில் தற்போது 94 வது ஆஸ்கர் விருது விழா பிரம்மாண்டமாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் மொத்தம் 24 பிரிவுகளுக்கு ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டது. இதில் சிறந்த திரைப்படம், திரைக்கதை, ஒளிப்பதிவு, இயக்கம், நடிகர், ஆடை வடிவமைப்பு, எடிட்டிங், சிறந்த விஷுவல் எஃபக்ட் என பல பிரிவுகளில் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதிற்கு ஏகப்பட்ட பிரபலங்கள் பலத்த போட்டியில் இருந்தார்கள்.

-விளம்பரம்-

ஹாலிவுட்டின் தலைசிறந்த பல படங்கள் இந்த முறை பல பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டு கடும் போட்டிகளை கொடுத்திருந்தது. மேலும், கொரோனா பிரச்சனை இருந்தாலும் நிறைய படங்கள் திரையில் வெளியாகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா மேடையில் நடிகர் வில் ஸ்மித் செய்த செயல் குறித்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பியது. அது என்னவென்றால், விழா மேடையில் கிரஸ் ராக் பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென்று மேடையேறிய நடிகர் வில் ஸ்மித் அவரை பளார் என கன்னத்தில் அறைந்து இருக்கிறார்.

இதையும் பாருங்க : பீஸ்ட்ட ‘Kgf’ எப்படி எதிர்கொள்ள போகுது – பத்திரிகையாளர் கேள்விக்கு யாஷ் சொன்ன பதில். பாராட்டும் ரசிகர்கள்.

- Advertisement -

தொகுப்பாளரை அறைந்த வில் ஸ்மித்:

அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியானதை தொடரந்து ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்து இருக்கிறது. இதனையடுத்து வில் ஸ்மித் எதற்காக இப்படி செய்தார்? என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு டேவிட் என்பவர் டீவ்ட் ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், ஸ்மித்தின் மனைவி ஜடா பின்கெட் மொட்டை தலை குறித்து ராக் கிண்டலாக பேசியுள்ளார். இதனால் கோபமடைந்த வில் ஸ்மித் மேடையிலேயே ராக்கை அடித்துள்ளார். பின் என் மனைவி குறித்து உன் வாயிலுருந்து இனி வார்த்தைகள் வரக்கூடாது என்று கோபமாக பேசி இருக்கிறார்.

வில் ஸ்மித்தின் கோபத்திற்கு காரணம்:

இந்த சம்பவம் ஆஸ்கர் விழா மேடையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது இந்த டுவிட்டர் வருவதைத் தொடர்ந்து வில் ஸ்மித் செய்தது தவறில்லை, யாராக இருந்தாலும் மனைவியை பற்றி தவறாக பேசினால் சண்டைக்கு தான் செல்வார்கள் என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.மேலும், இந்த நிகழ்ச்சியில் சிறந்த நடிகருக்கான விருதை வில் ஸ்மித் பெற்று இருக்கிறார். முதன் முறையாக ஆஸ்கர் விருது வாங்கியதால் மிகுந்த உற்சாகத்துடன் வில் ஸ்மித் உற்சாகத்துடன் மேடையில் உரையாற்றும்போது கண்ணீர் சிந்தினார்.

-விளம்பரம்-

வில் ஸ்மித் நடித்து ஆஸ்கர் விருது பெற்று படம்:

இந்த விருது கிடைக்க உதவியாக இருந்த படத்தின் தயாரிப்பாளர்களான செரினா மற்றும் வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோருக்கு மேடையில் நன்றி தெரிவித்தார். மேலும், இந்த விருது விழாவில் தொகுப்பாளரை அறைந்ததற்கும் ஆஸ்கர் குழுவினரிடம் மன்னிப்பு கேட்டார் வில் ஸ்மித். இதனைத் தொடர்ந்து முதன்முறையாக ஆஸ்கர் விருது வென்ற நடிகர் வில் ஸ்மித் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. நடிகர் வில் ஸ்மித் நடித்த கிங் ரிச்சர்டு திரைப்படம் ஒரு பயோபிக் படமாகும். இது புகழ்பெற்ற டென்னிஸ் பயிற்சியாளர் ரிச்சர்ட் வில்லியம்சனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது.

ரிச்சர்ட் வில்லியம்ஸ் பற்றிய தகவல்:

பிரபல டென்னிஸ் வீராங்கனைகளான செரினா வில்லியம்ஸ் மற்றும் வீனஸ் வில்லியம்ஸின் தந்தை தான் ரிச்சர்ட் வில்லியம்ஸ். இவர் தான் செரீனா மற்றும் வீனஸ் வில்லியம்ஸ் இருவருக்கும் பயிற்சியாளராக இருந்தவர். கடந்த ஆண்டு திரையரங்குகளில் இந்த படம் வெளியானது. இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை உட்பட 6 பிரிவுகளில் இந்த படம் நாமினேட் ஆகி இருந்தது. இதில் சிறந்த நடிகருக்கான விருதை வில் ஸ்மித் பெற்று இருக்கிறார்.

Advertisement