ஜி.வி. பிரகாஷ்- சைந்தவி விவாகரத்து தொடர்பான சர்ச்சைகளுக்கு நடிகை திவ்யபாரதி போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே ஜி.வி பிரகாஷ்-சைந்தவி பிரிந்த செய்தி தான் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கோலிவுட்டில் மிக பிரபலமான இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் சாதித்து வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் இரு ஆஸ்கார் விருதுகளை அள்ளி வந்து பெருமை சேர்த்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் அக்கா மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஜிவி பிரகாஷ் அவர்கள் முதன்முதலாக ‘வெயில்’ என்ற படத்தில் இசை அமைத்து தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். அதைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். குறிப்பாக, கடந்த 2024 ஆம் ஆண்டு இவருக்கு நல்ல ஆண்டாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும். கடந்த ஆண்டு இவர் இசையில் வெளிவந்த அனைத்து பாடல்களும் ஹிட் தான்.
அதோடு இவர் படங்களில் ஹீரோவாகவும் கலக்கி கொண்டு இருக்கிறார்.
ஜிவி பிரகாஷ் குறித்த தகவல்:
அந்த வகையில் கடைசியாக இவர் நடித்த படம் கிங்ஸ்டன். இந்த படத்தை இவரே தயாரித்து இருந்தார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. தற்போது இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில் ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி இருவரும் பல வருடங்களாக காதலித்து கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். பல வருடங்களுக்கு பிறகு தான் இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி:
இந்த நிலையில் கடந்த ஆண்டு தாங்கள் இருவரும் பிரிவதாக சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இது பலருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆனால், இவர்களின் பிரிவிற்கு காரணம் என்ன? என்று தெரியவில்லை. பிரிவிற்கு பிறகும் சைந்தவி- ஜி.வி பிரகாஷ் இருவருமே ஒன்றாக நிகழ்ச்சிகளில் கலந்து வருகிறார்கள். சில வாரங்களுக்கு முன்பு தான் இவர்கள் இருவருமே ஒரே காரில் சென்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பரமாக விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார்கள். இது ஒரு பக்கம் இருக்க, ஜி.வி. பிரகாஷ்- சைந்தவி விவாகரத்திற்கு காரணம் நடிகை திவ்ய பாரதி தான் என்று கூறப்படுகிறது.

பிரிவிற்கு காரணம்:
ஜி.வி பிரகாஷ், திவ்யபாரதி இருவருக்கும் இடையே இருக்கும் தொடர்பினால் தான் சைந்தவி சண்டை போட்டு பிரிந்தார் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகிறது. இதனால் இது தொடர்பாக இருவருமே ஏற்கனவே நிறைய விளக்கம் கொடுத்திருந்தார்கள். இருந்தும் மீண்டும் திவ்யபாரதி உடன் ஜி.வி. பிரகாஷ் டேட்டிங்கில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக நடிகை திவ்ய பாரதி மீண்டும் விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் அவர், ஜி.வியின் குடும்ப பிரச்சனைக்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும்.

திவ்யபாரதி பதிவு:
இது ஜி.வி. பிரகாஷ்- சைந்தவி இடையே இருக்கும் பிரச்சனை. திருமணமான ஒரு ஆணுடன் நான் ஏன் டேட்டிங் செய்ய வேண்டும்? எனக்கு அவசியமே கிடையாது. இப்படி இந்த மாதிரியான வதந்திகளுக்கு பதிலளிக்கவும் தேவையில்லை என்றாலும் எல்லை மீறி என்னை பற்றி நிறைய தேவையில்லாத விமர்சனங்களும், சர்ச்சைகளும் பரவிக் கொண்டுதான் இருக்கிறது. இது என்னை ரொம்பவே காயப்படுத்தியும் கஷ்டப்படுத்தியும் வருகிறது. அதோட என்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நான் நடந்து கொள்ளவே மாட்டேன். சம்பந்தமே இல்லாமல் ஜி.வி. பிரகாஷ் -சைந்தவி விவாகரத்தில் என்னுடைய பெயரை இழுத்து விடுகிறார்கள். வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் நான் ஒரு நடிகருடன் டேட்டிங்கை செய்ய மாட்டேன். இதுதான் என்னுடைய முதலும் கடைசியமான அறிக்கை என்று கூறி இருக்கிறார்.






