தமிழ் சினிமா உலகில் காதல், ரொமான்டிக் படம் என்றாலே அது கௌதம் மேனன் தான். இவர் படத்தை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் படை உள்ளது. ஆனால், இவர் பல ஆக்ஷன் படங்களை கூட இயக்கி இருக்கிறார். அந்த வகையில் வேட்டையாடு விளையாடு படமும் ஒன்று. 2006 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் கமல், ஜோதிகா, கமலினி முகர்ஜி என்று பலர் நடித்து இருந்தனர். ஆனால், இந்த படத்தில் நீங்கள் கவுதமியை நோட் செய்து இருக்க மாடீர்கள்.
1998ஆம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்ற தொழில் அதிபருடன் காதலித்து திருமணம் செய்துகொண்டார் கவுதமி. ஆனால் 1999ஆம் ஆண்டு இருவரும் தகருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுவிட்டனர். இந்த தம்பதியருக்கு சுப்புலட்சுமி என்ற ஒரு மகள் இருக்கிறார். அதன் பின்னர் 2005ஆம் ஆண்டு முதல் தனது நண்பர் கமலுடன் காதல் ஏற்பட்டு இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஓரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் கடந்த ஆண்டு பிரிந்து விட்டனர்.
இதையும் பாருங்க : காதலிக்க நேரமில்லை தொடரில் நடித்த நடிகையை ஞாபகம் இருக்கா – சக நடிகரோடு திருமணமாம்.
இதற்கு காரணம் எந்த ஒரு கருத்து வேறுபாடும் இல்லை. தனது மகளின் எதிர்கால வாழ்க்கை குறித்து அக்கரை கொண்டு இந்த முடிவை எடுத்ததாக கவுதமி கூறினார். இவர்கள் பிரிவதற்கு முன்பு வரை பல படங்களில் நடித்தனர். அந்த வகையில் வேட்டையாடு விளையாடு படத்தில் வரும் வெண்ணிலவே பாடலின் ஒரு காட்சியில் வந்து இருப்பார் கௌதமி.
இதே பாடலில் கௌதம் மேனனும் சில பிரேம்களில் வந்திருப்பார். அதே போல இந்த படத்தின் மூலம் தான் கௌதம் மேனனின் தந்தையும் சினிமாவில் நடிக்கும் ஆசையை நிறைவேற்றி வைத்திருக்கிறார் கௌதம் மேனன். கௌதம் மேனனின் தந்தை கமலின் தீவிர ரசிகர்.இடம்பெறும் முதல் பாடலான கற்க கற்க பாடலில் வரும் இறுதிக்காட்சியில் கவுதம் மேனன் தந்தையை நடிக்க வைத்திருப்பார் கௌதம் மேனன் என்பது குறிப்பிடத்தக்கது.