காதலிக்க நேரமில்லை தொடரில் நடித்த நடிகையை ஞாபகம் இருக்கா – சக நடிகரோடு திருமணமாம்.

0
4223
chandra
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காதலிக்க நேரமில்லை என்ற தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகை சந்திரா லக்ஷ்மன். இவர் தமிழில் ஸ்ரீகாந்த் நடிப்பில் ‘மனசெல்லாம்’ படத்தில் ஸ்ரீகாந்திற்கு தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வந்தார்.

-விளம்பரம்-

திரைப்படங்களை விட இவருக்கு மிகவும் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது தொலைக்காட்சி தொடர்கள் தான். சினிமாவில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்காததால் தனது பயணத்தை தொலைக்காட்சி சீரியல் பக்கம் தொடர்ந்தார். இதுவரை தமிழில் கோலங்கள், காதலிக்க நேரமில்லை, துளசி பாசமலர் போன்ற பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.

இதையும் பாருங்க : ஒரே படத்தில் நடித்துள்ள கெளதம் மேனன் மற்றும் அவரின் தந்தை – எந்த படம் தெரியுமா ? இதோ புகைப்படம்.

- Advertisement -

மேலும் மலையாளத்திலும் பல தொடர்களில் நடித்துள்ளார் சந்திரிகா. இறுதியாக தமிழில் தில்லாலங்கடி திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். தற்போது மலையாளத்தில் ஒளிபரப்பாகி பெரும் ‘ஒன்னும் ஒன்னும் மூனு’ என்ற தொலைக்காட்சித் தொடர்கள் நடித்து வருகிறார்.

Swantham Sujatha fame Chandra Lakshman gets married to Tosh Christy;  Announces with a beautiful photo | PINKVILLA

இப்படி ஒரு நிலையில் இவர் தனது சக நடிகரான டோஷ் க்றிஸ்டி என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். இவர் ‘ஸ்வந்தம் சுஜாதா’ என்ற மலையாள தொடரில் நடித்து வந்தார். இதே தொடரில் டோஷ் க்றிஸ்டியும் நடித்து வந்தார். இதுகுறித்து பதிவிட்டுள்ள சந்திரா, எனது திருமணம் பற்றிய முடிவில்லா அத்தனை கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன். எங்களை ஆசீர்வதித்து உங்கள் பிரார்த்தனைகளில் எங்களை வைத்திருங்கள் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement