தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் நடிக்கும் காரணம் குறித்து காயத்ரி பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் காயத்ரி. இவர் 2012 ஆம் ஆண்டு வெளிவந்திருந்த 18 வயசு என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்தின் மூலம் தான்.இந்த படத்தின் மூலம் காயத்ரி வேற லெவல் பிரபலமாகிவிட்டார் என்று சொல்லலாம்.
அதனை தொடர்ந்து இவர் பொன்மாலைப் பொழுது, ரம்மி, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். அதோடு இவர் அதிகம் விஜய் சேதுபதி உடன் தான் சேர்ந்து நடித்திருக்கிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருந்த படம் மாமனிதன்.இந்த படத்தில் காயத்ரி அவர்கள் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக குடும்ப தலைவியாக நடித்திருந்தார்.
அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தில் இவருடைய நடிப்பு பாராட்டைப் பெற்றிருந்தது. இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதனை அடுத்து இவர் லோகேஷ் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியாகியிருந்த விக்ரம் படத்தில் பகத் பாசனின் காதலியாக நடித்திருந்தார். இந்த படம் இந்திய அளவில் கொண்டாடப்பட்டிருந்தது.
மேலும், விக்ரம் படம் விமர்சன ரீதியாக மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனை அடுத்து காயத்ரி அவர்கள் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். நடிகை காயத்ரி தமிழில் அறிமுகமானது என்னவோ தயாரிப்பாளர் எஸ் எஸ் சக்ரவர்த்தி மகன் ஜானி நடித்த 18 வயசு படத்தின் மூலம் தான். ஆனால், அதனை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘ நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படம் தான் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது.
அதனை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இவர் பல படங்களில் நடித்துவிட்டார்.இப்படி ஒரு நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற காயத்ரியிடம் இது குறித்து கேட்கப்பட்ட போது ‘மற்ற படங்களை ஒப்பிடும் போது நீங்கள் பெரும்பாலும் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் தான் நடித்துள்ளீர்கள். அதற்கான காரணம் உங்களுக்கு விஜய் சேதுபதியுடன் நடிக்கும் வாய்ப்பு மட்டும் தான் வருகிறதா? இல்லை அவருடன் நடித்தால் ஹிட் ஆகும் என்பதாலா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த காயத்ரி இரண்டும் கிடையாது இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் முடிவு செய்யும் விஷயம் அது’ என்று பதில் அளித்துள்ளார்.