இது உனக்காக தான் விஜய் – உடைந்த கையோடு ஜெனிலியா வெளியிட்ட வீடியோ. சர்ப்ரைஸான விஜய் ரசிகர்கள்.

0
17572
genelia

தமிழில் 2003 ஆண்டு இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியானது பாய்ஸ் படம். இந்த படத்தில் பல புது முக நடிகர்களை இயக்குனர் ஷங்கர் அறிமுகம் செய்தார். மேலும் இந்த படத்தில் கதாநாயகியாகியாக ஜெனிலியா என்ற புதுமுகத்தையும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தார் ஷங்கர். இந்த படத்திற்கு பின்னர் இவர் தமிழில் நடித்த சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற படங்களில் இவரது சுட்டி தனமான நடிப்பிற்கு பல ரசிகர்கள் உருவாகின. தமிழ் படங்களை தவிர ஹிந்தி, தெலுங்கு,கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் தனது முதல் ஹிந்தி படத்தில் நடித்த போதே இந்தி நடிகர் ரிதீஸ் தேஸ்முக் உடன் நெருக்கம் ஏற்பட்டது.பின்னர் இவர்கள் இருவரரின் காதலும் 2012 ஆண்டு திருமணத்தில் முடிந்தது. பின்னர் இவர்களுக்கு 2014 ஆம் ஆண்டு ரியான் என்ற மகனும், 2016 ஆம் ஆண்டு ராய்ல் என்று மகனும் பிறந்தார்கள். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வந்தார் ஜெனிலியா.

இதையும் பாருங்க :குக்கு வித் கிறுக்கு’ என்ற பெயரில் ரீ -மேக் ஆனா குக்கு வித் கோமாளி – எந்த சேனல்னு நீங்களே பாருங்க.

- Advertisement -

சமீபத்தில் ஸ்கேட்டிங் செய்த போது விழுந்து வாரி கை எலும்பை முறித்துக்கொண்டதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதனால் இவருக்கு பலரும் ஆறுதல் தெரிவித்தனர். இப்படி ஒரு நிலையில் இவர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு தனது கணவர் மற்றும் நண்பர்களுடன் உடைந்த கையோடு நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும், அந்த வீடியோவில் ‘இது உனக்காக தான் விஜய், உங்களின் வெற்றியை எப்போதும் என்னுடைய நண்பர்க்ளுடன் கொண்டாடுவேன்’ என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், விஜய் ரசிகர்கள் பலரும் இந்த வீடியோவை அதிகம் பகிர்ந்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement