‘குக்கு வித் கிறுக்கு’ என்ற பெயரில் ரீ -மேக் ஆனா குக்கு வித் கோமாளி – எந்த சேனல்னு நீங்களே பாருங்க.

0
5900
cooku
- Advertisement -

தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்துமே TRP மதிப்பீடு என்ற ஒரு விடயத்தை வைத்து தான் தங்களின் தொலைக்காட்சி தரத்தை முடிவு செய்து வருகிறது.அந்த வகையில் பல்வேறு தொலைக்காட்சிகளும் தங்களுடைய TRP தரத்தை நிலைநாட்டிக்கொள்ள பல்வேறு வித்யாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ்,கலர்ஸ் என்று பல்வேறு தொலைக்காட்சியின் அச்சாரமாக விளங்கி வருவது சீரியல்கல் மட்டும் தான். அதில் ஒரு சில தொலைக்காட்சியில் வரும் ஒரு சில நிகழ்ச்சிகள், டிவியின் TRP அளவை எகிற வைக்கிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது.

இதையும் பாருங்க : நடிகர் மன்சூர் அலிகானுக்கு இவ்வளவு அழகிய மகளா. அட, படத்துல வேற நடிச்சிருக்காங்க.

- Advertisement -

அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது.சொல்லப்போனால் சமீபத்தில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த பிக் பாஸ் 4நிகழ்ச்சியை விட இந்த ஷோவிற்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது என்பது தான் தவிர்க்க முடியாத உண்மை.

தற்போது இந்த ரியாலிட்டி நிகழ்ச்சியை அடித்துக்கொள்ள வேறு எந்த தொலைக்காட்சியிலும் ரியாலிட்டி நிகழ்ச்சி இல்லை. இப்படி ஒரு நிலையில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியை கன்னடத்தில் ரீ -மேக் செய்துள்ளனர். மேலும், இந்த நிகழ்ச்சிக்கு குக்கு வித் கிறுக்கு என்று பெயர் வைத்துள்ளனர். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. தமிழை போல கன்னடத்திலும் இந்த நிகழ்ச்சி ஹிட் அடிக்குமா என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

-விளம்பரம்-
Advertisement