மண்ட சூடு மஹத்.! முதலை கண்ணீர் யாஷிகா..! Double Elimination ஜோடியா வெளியே போங்க.! வறுத்தெடுத்த நடிகை .!

0
490
Mahat
- Advertisement -

நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களில் மஹத் வெளியேற்றபட்டர். பிக் பாஸ் வரலாற்றின் முதன் முறையாக ரெட் கார்டு மூலம் எலிமினேட் செய்யப்பட்டார் மஹத். மஹத்தின் எலிமினேஷனால் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா இருவரும் மிகவும் கண் கலங்கி அழுது கொண்டிருந்தனர்.

-விளம்பரம்-

- Advertisement -

மஹத்தின் எலிமினேஷனை விட யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா வடித்த கண்ணீர் தான் நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஹைலைட்டாக இருந்தது. இந்நிலையில் காமெடி நடிகை ஆர்த்தி ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவின் அழுகையை நீலிக்கண்ணீர் என்று ட்விட்டரில் கமென்ட் செய்து கிண்டலடித்துள்ளார்.

சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நடிகை ஆர்த்தி ”சிறந்த பர்பேர்மர் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவிற்கு தான் செல்கிறது. முதலை கண்ணீர், கவலை படாதீர்கள் பெண்களே அடுத்த வாரம் டபுள் எலிமினேஷன் பண்ண சொல்றோம், முரட்டு மஹத், மண்டை சூடுமஹத். பிராச்சி உங்களை எலிமினேட் செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

Yashika

மஹத் வெளியேறியதற்கு முக்கிய காரணமே ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவின் பிரச்சனைகளை தன்னுடைய பிரச்சனையாக எண்ணி மும்தாஜிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டார். மஹத் அப்படி நடந்து கொண்டதற்கு யாஷிகா மீது வைத்துள்ள காதல் அவருடைய கண்ணை மறைத்து விட்டது என்று ரிதிவிக்கா கூட தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement