“இருக்கானா இடுப்பிருக்கானா” என்ற பாடலின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர் நடிகை இலியானா. இவர் தென்னிந்திய திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் ஒரு மாடலிங்கும் ஆவார். மேலும், இவர் ‘தேவதாசு’ எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து இவர் ‘கேடி’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பின் விஜய் அவர்கள் நடிப்பில் வந்த ‘நண்பன்’ படத்தில் நடித்திருந்தார். இவர் அதிகமாக தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் தான் நடித்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் இலியானா பாலிவுட்டில் தனெக்கென ஒரு அங்கீகாரத்தையும் பதித்தவர். நடிகை இலியானா அவர்கள் ஆஸ்திரேலியாவை சேர்ந்த போட்டோகிராஃபர் ஆண்ட்ரூ நீபோன் என்பவரை காதலித்து வந்தது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், காதலித்த சில காலத்திலேயே இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.
இதையும் பாருங்க : ‘அடுத்த யாஷிகா நிலம தான்’ – தன் பிறந்தநாள் போஸ்டில் கமன்ட் செய்தவருக்கு எம் எஸ் பாஸ்கர் மகள் பதிலடி.
அதனால், சில மாதங்களுக்கு முன் இவர்கள் உடைய காதல் பிரேக் அப் ஆகிவிட்டதாக இணையங்களில் பேசப்பட்டது. பின்னர் தாங்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக இலியானா கூறி இருந்தார்.அதே போல் காதல் தோல்விக்கு பின் இலியானா தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் தகவல் வெளியானது.இதுகுறித்து விளக்கமளித்த இலியானா, நான் தற்கொலைக்கு முயற்சிக்கவும் இல்லை, நான் உயிருடன் இருக்கிறேன்.
இதுபோன்ற தகவல்களை அவர்கள் எங்கிருந்து பெறுகிறார்கள் என்பது கூட எனக்குத் தெரியாது என்று கூறி இருந்தார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவரிடம் சமீபத்தில் இன்ஸ்டகிராமில் ஒருவர் ‘உங்கள் கன்னித்தன்மையை எப்போது இழந்தீர்கள்’என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த இலியானா, வாவ், மூக்கு பொடைக்குதா ? உங்க அம்மா என்ன சொன்னாங்க என்று கூறியுள்ளார்.