சினிமாவை பொறுத்த வரை துணை நடிகைகளாக இருந்து கதாநாயகியாக மாறியவர்கள் பட்டியல் மிகவும் குறைவு தான். அந்த வரிசையில் நடிகை இந்துஜாவும் ஒருவர். தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான மேயாத மான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார்கள். இதே படத்தில் வைபவ்வின் தங்கையாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன். இந்த படத்தில் இடம்பெற்ற தங்கச்சி பாடலில் இவர் போட்ட குத்தாட்டம் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்தார்.
மேயாதமான் திரைப்படத்திற்குப் பின்னர் பல்வேறு படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தார் நடிகை இந்துஜா. மேயாத மான் படத்திற்கு பின்னர் மெர்குரி 60 வயது மாநிறம் பில்லாபாண்டி போன்ற பல்வேறு படங்களில் துணை நடிகையாக நடித்து இருந்தார் இந்துஜா மேலும் கடந்த ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியான மகாமுனி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அவதாரமெடுத்தார் இறுதியாக விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த பிகில் திரைப்படத்தில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்திருந்தார் இந்துஜா.
இதையும் பாருங்க : விஜய்சேதுபதி பிறந்தநாளுக்கு பார்த்திபன் கொடுத்த 3 வித்யாசமான பரிசு பொருட்கள்.
மேயாதமான் திரைப்படத்தில் படு குடும்பப் பெண்ணாக நடித்து வந்த இவர் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சியிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் நடித்துள்ள சூப்பர் டூப்பர் என்ற படம் டீஸர் வெளியாகி இருந்தது. அதில் இந்துஜா மாடர்னாகவும் கொஞ்சம் கிளாமராகவும் நடித்துள்ளதாக தெரிகிறது. இதனை கண்ட ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகி இருந்தனர். அதேபோல சமீபகாலமாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் அட்டைப் படத்திற்கு புடவையில் படு கிளாமராக போஸ் கொடுத்து இருந்தார் . அந்த புகைப்படத்தில் பாரதிராஜா திரைப்படத்தில் வரும் கதாநாயகிகள் போல பாவாடை அணியாமலும் ரவிக்கை அணியாமல் இருக்கிறார் என்று ரசிகர்கள் கிண்டல் அடித்துவந்தனர். இந்த நிலையில் நடிகை இந்தரஜா அதே அட்டை பட போட்டோ ஷூட்டில் குளியல் தொட்டியில் போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.