விஜய்சேதுபதி பிறந்தநாளுக்கு பார்த்திபன் கொடுத்த 3 வித்யாசமான பரிசு பொருட்கள்.

0
14494
Vj
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மக்கள் செல்வன் நாயகனாக விளங்கி வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. ஜனவரி 16 ஆம் தேதி அதாவது இன்று நடிகர் விஜய் சேதுபதி அவர்களின் பிறந்த நாள். இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் பார்த்திபன் அவர்கள் விஜய் சேதுபதிக்கு மிக அருமையான கிப்ட்டை ஒன்று கொடுத்து உள்ளார். தற்போது அவர் விஜயசேதுபதி கொடுத்த பரிசு தான் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவர் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தில் தான் முன்னணி கதைநாயகனாக நடித்தார். அதனைத் தொடர்ந்து இவர் பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சுந்தர பாண்டியன், சூது கவ்வும், நானும் ரவுடிதான், சேதுபதி, தர்மதுரை, விக்ரம் வேதா, கருப்பன் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து உள்ளார்.

-விளம்பரம்-

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளி வந்த சங்கத் தமிழன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு பாதையை உருவாக்கியவர் நடிகர் பார்த்திபன். இவர் வித்தியாசமான முறையில் கதைகளை கொடுப்பதில் கைதேர்ந்தவர். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், திரைப்பட இயக்குனர் என பல முகங்களைக் கொண்டவர். சமீபத்தில் கூட நடிகர் பார்த்திபன் எழுதி இயக்கி நடித்த ஒத்த செருப்பு சைஸ் 7 படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இதையும் பாருங்க : பள்ளி நோட்டில் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மகன் எழுதிய பொங்கல் கவிதைகள்.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் பார்த்திபன் அவர்கள் நடிகர் விஜய் சேதுபதி பிறந்த நாளுக்கு கிப்ட் கொடுத்து உள்ளார். அதுவும் மூன்று கிப்ட் தந்து உள்ளார். முதல் பரிசு நடிகர் விஜய் சேதுபதியும், அவருடைய மனைவி ஜெஸி இருக்கிறஓவியத்தையும். இரண்டாவது பரிசு குதிரை உருவ சிலையையும். மூன்றாவது பரிசு செஸ் கிங்.இந்த மூன்று பரிசுகள் மூலம் விஜய் சேதுபதி அவர்கள் சினிமா உலகில் ராஜா போல் நீண்ட தூரம் செல்ல வேண்டும் என்பதை சதுரங்கத்தில் வரும் ராஜா உருவச் சிலையும் மற்றும் குதிரையும் பரிசாக அளித்து உள்ளார் நடிகர் பார்த்திபன்.

இது உண்மையாலுமே மிக அற்புதமான பரிசு. மேலும், நடிகர் பார்த்திபன் அவர்கள் விஜய் சேதுபதிக்கு பிறந்த நாள் பரிசை கொடுக்கும் போது எடுக்கபட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் விஜய் சேதுபதிக்கு வாழ்த்துக்களையும், பார்த்திபனுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

தற்போது நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார்.
மேலும், இந்த படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, அழகம் பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல முக்கியமான நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் என்ற படத்திலும் விஜய் சேதுபதி அவர்கள் நடித்து வருகிறார்.

Advertisement