மூன்று வருட லவ், சினிமாவால் பிரிந்த காதல். அவருக்கு திருமணமே ஆகிடச்சாம்- நடிகை இனியா பேட்டி.

0
1948

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகை இனியா. இவர் 2005ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த சைரா என்ற படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமானார். பின் இவர் 2011 ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளியான வாகை சூட வா என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்த படத்திற்காக இவர் தேசிய விருதும் பெற்றார். இந்த படத்தை தொடர்ந்து இவர் மௌனகுரு, அம்மாவின் கைப்பேசி, சென்னையில் ஒரு நாள், கண் பேசும் வார்த்தைகள், மாசாணி, நான் சிகப்பு மனிதன், காக்கா முட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

Vaagai Sooda Vaa photos (21)

அதற்கு பிறகு இவருக்கு தமிழில் பெரியதாக பட வாய்ப்புகள் அமையவில்லை. பின் இவர் பிற மொழிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். மேலும், இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை இனியா அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் தன்னுடைய காதல் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். லவ் பண்ணி இருக்கீங்களா? நான் லவ் பண்ணி இருக்கேன்.

இதையும் பாருங்க : Sms படத்தில் ஜீவாவின் தங்கையாக நடித்த பொண்ணா இது. கடற்கரையில் படு நீச்சல் உடையில் கொடுத்த போஸை பாருங்க.

- Advertisement -

ஆனால், அது வந்து பிரேக் அப் ஆகி விட்டது. நான் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போது ஒருவரை மூன்று வருடமாக லவ் பண்ணேன். அப்பத் தான் நான் சினிமாவில் நடிக்க முயற்சி செய்து கொண்டிருந்த நேரம். அதனாலேயே எங்கள் இரண்டு பேருக்கும் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் ஏற்பட்டது. பிறகு இது செட் ஆகாது என்று நாங்கள் இரண்டு பேருமே பிரண்டாக மாறிட்டோம். எங்களுக்குள் இருந்த நட்பு சூப்பராக உள்ளது. அதனால் நாங்கள் இப்பவரை நண்பர்களாகத் தான் இருக்கிறோம். அவருக்கு சமீபத்தில் தான் கல்யாணம் ஆனது. எனக்கு பொண்ணு போட்டோ எல்லாம் அனுப்பி வைத்தார். கல்யாணத்துக்கும் என்னை கூப்பிட்டு இருந்தார்.

Vaagai Sooda Vaa Photos: HD Images, Pictures, Stills, First Look ...

எனக்கு அப்போது படத்தின் சூட்டிங் இருந்ததினால் போக முடியவில்லை. உங்கள் க்வாரன்டீன்ப் நேரம் எப்படி போயிட்டிருக்கு? என்னுடைய வீடு திருவனந்தபுரத்தில் இருக்கிறது. ஒரு நிகழ்ச்சிக்காக கொச்சின் வந்திருந்தேன். அப்பத்தான் இந்த லாக் டவுன் அறிவித்தார்கள். அதுக்கு பிறகு என்னால் என் வீட்டுக்கு போக முடியாமலும், சென்னைக்கு போக முடியாமலும் கொச்சினிலேயே தங்கும் நிலைமை வந்து விட்டது. இப்ப நான் என்னுடைய அக்கா வீட்டில் இருக்கிறேன்.

இதையும் பாருங்க : வி ஐ பி படத்திற்கு முன்பாகவே விக்னேஷ் சிவனை இந்த படத்தில் நோட் செய்துள்ளீர்களா. அதுவும் ஹீரோ நண்பனாக.

-விளம்பரம்-

எங்க அம்மா சாப்பாடு, என்னுடைய நாய்க்குட்டி, என்னுடைய பிரண்ட்ஸ் எல்லாத்தையுமே நான் ரொம்ப மிஸ் பண்றேன். இந்த க்வாரன்டீன் நேரம் எல்லோருக்குமே ஒரே மாதிரி இருக்கும்ன்னு சொல்ல முடியாது. இது எல்லாருக்குமே ஒரு சவாலான நேரம் தான். இயற்கைக்கு நாம் என்ன செய்கிறோமோ அதை தான் இயற்கை நமக்கு திருப்பி கொடுக்கும். இதுவும் ஒருவிதமான அனுபவம். இதுவும் கடந்து செல்லும் என்ற நம்பிக்கையில் இருப்போம் என்று கூறினார்.

சமீபகாலமாக இவருக்கு படவாய்ப்புகள் இல்லாமல் தவித்துக் கொண்டு வருகிறார். இதனால் இவர் உடல் எடை குறைத்து ஒல்லியான மாறிய புகைப்படத்தையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார். தற்போது இவர் கலர்ஸ் என்ற ஒரு படத்தில் வரலட்சுமி உடன் நடித்து இருக்கிறார். இதனை தொடர்ந்து இவர் காஃபி என்ற ஹீரோயின் சென்ட்ரிக் த்ரில்லர் படத்தில் நடித்து உள்ளார். இந்த ரெண்டு படமும் தமிழில் வெளியாக உள்ளது.

Advertisement