கடந்த சில நாட்களாக சமூக வளைத்தளத்தில் #இந்தி தெரியாது போடா என்ற ஹேஷ் டேக் மற்றும் டி-ஷர்ட் தான் கொஞ்சம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் மும்மொழி கல்வி விவகாரம் பெரும் பஞ்சாயத்தில் இருந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக இந்த மும்மொழி கொள்கை விவகாரம் சமூக வலைத்தளத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியை கட்டாய படமாக படிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. மேலும், தேசிய கல்வி கொள்கையில், நாடு முழுவதும் மும்மொழி கொள்கையை அமல்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டது.
இப்படி ஒரு நிலையில் ட்விட்டரில் கூட #இந்தி தெரியாது போடா என்ற ஹேஷ் டேக் கூட கடந்த சில நாட்களுக்கு முன் ட்ரெண்டிங்கில் வந்தது.திமுக போன்ற பல்வேறு கட்சியினர் இந்த இந்தி எதிர்ப்பு பிரச்சனையில் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில் தமிழ் சினிமாவில் இருக்கும் பல்வேறு பிரபலங்கள் கூட இந்தி தெரியாது போடா என்ற வாசகம் அடங்கிய டி-ஷர்ட்டை அணிந்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை ஜோதிகா தனது மகனுக்கு இந்தி பிடிக்காது என்று கூறிய வீடியோ ஒன்று சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. முதன் முதலாக சினிமா துறைக்குள் ஹிந்தி படத்தின் மூலம் தான் ஜோதிகா என்ட்ரி கொடுத்தார். இவர் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் , சூர்யா என்று பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். இவர் தமிழ் மொழி மட்டும் இல்லாமல் தென்னிந்திய மொழிகளில் கொடி கட்டி பறந்தார்.
2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி இரு வீட்டில் உள்ள பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு தியா என்ற பெண் குழந்தையும், தேவ் என்ற ஆண் குழந்தையும் உள்ளார்கள். இந்நிலையில் நடிகை ஜோதிகா அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் தொகுப்பாளர் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் தமிழ் வார்த்தை என்ன என்று கேட்டுள்ளார். அதற்கு ஜோதிகா அவர்கள் கூறியது, நானும் சூர்யாவும் அதிகமாக தமிழில் தான் பேசுவோம்.
குழந்தைகளிடம் நான் நிறைய தமிழில் பேசுவேன். என் பொண்ணு நல்லா ஹிந்தி பேசுவாள். ஆனால், என் பையனுக்கு ஹிந்தி பேச புடிக்காது. அம்மா தயவு செஞ்சி எனக்கு ஹிந்தி நையி என்று சொல்லுவான். எனக்கு என் பையன் ஹிந்தி பேசணும் என்று ரொம்ப ஆசை. என் குழந்தைகல் எல்லா மொழிகளையும் கத்துக்கணும்ன்னு எனக்கு ஆசை. எனக்கு தெரியல என்ன பண்ணுவாங்கன்னு என்று கூறினார்.