கே எஸ் ரவிக்குமார் படத்தில் ஹீரோவாக பிக் பாஸ் 3 பிரபலம் – வேற லெவல் போங்க.

0
1127
tharshan
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் பங்குபெறும் போட்டியாளர்களுக்கு நிச்சயம் பட வாய்ப்புகள் வந்துவிடும். பெரும்பாலும் பிக் பாஸில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் பலரும் சினிமா வாய்ப்பை எதிர்பார்த்து தான் கலந்து கொள்கின்றனர். முதல் சீசனில் பங்குபெற்ற ஜூலி துவங்கி மூன்றாம் சீசனில் பங்குபெற்ற லாஸ்லியா வரை பலருக்கும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி சினிமா வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை நான்கு சீசனை கடந்து உள்ளது. இதில் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்றால் அது மூன்றாம் சீசன் தான்.

-விளம்பரம்-

இந்த சீசன் போது கே எஸ் ரவிக்குமார் போன் செய்து லாஸ்லியாவிற்கு பட வாய்ப்புகள் காத்துகொண்டு இருப்பதாக கூறி இருந்தார். அவர் வாய் முகுர்த்தத்திற்கு ஏற்றார் போல லாஸ்லியா அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆனார். அதே போல இந்த சீசனில் வெற்றியாளராக வந்த பாடகர் முகேன் கூட தற்போது ‘வெற்றி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆனால், மூன்றாம் சீசனில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தர்ஷனுக்கு தான் எந்த பட வாய்ப்புகளும் அமையாமல் இருந்தது.

இதையும் பாருங்க : பிக் பாஸுக்கு பின் ஷிவானி நடத்திய முதல் போட்டோ ஷூட் – இனி 4 மணி கிடையாது டைம மாத்திட்டாங்க.

- Advertisement -

மாடல் அழகனான தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே பல்வேறு விளம்பர படங்களில் நடித்துள்ளார். ஆனால், இவரது கனவு, சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்பது தான். தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியபோது நடிகர் கமலஹாசன், தர்ஷன் தனது தயாரிப்பு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நபர் என்று அறிவித்திருந்தார். இதனால் இந்தியன்-2 படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

tharshan

ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இப்படி ஒரு நிலையில் நடிகர் தர்ஷன், கே எஸ் ரவிகுமார் படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என்று கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் தமிழ் ரீமேக்கில் வயதான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். மேலும் இந்த படத்தில் கேஎஸ் ரவிக்குமார் மகனாக பிக் பாஸ் சீசன் 3 பிரபலம் தர்ஷன் ஹீரோவாக நடிக்க உள்ளாராம்.

-விளம்பரம்-
Advertisement