நான் அரசியலுக்கு வந்தால் இந்த இரண்டையும் செய்ய மாட்டேன்.! நடிகை கொடுத்த ஷாக்

0
253
Actress-kangana-ranavat

தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்த ”தாம் தூம்” படத்தின் முலம் அறிமுகமானவர் நடிகை கங்கனா ரனாவத். பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்து வரும் இவரை பாலிவுட் நயன்தாரா என்று கூறினாலும் ஆச்சரியமில்லை.

Kangana-Ranautஇந்தியில் கதாநாயாகிக்கு முக்கியதுவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகை கங்கனா ரனாவத். தற்போது ஜான்சி ராணி லட்சுமிபாய் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் ‘மணிகர்னிகா’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

சமீப காலமாக நடிகை கங்கனா ரனாவட்டிதிற்கு அரசியல் ஆர்வம் வந்துவிட்டதாக பாலிவுட் வட்டாரங்களில் சில பேச்சுக்கள் கிளம்பின. இந்நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்குபெற்ற நடிகை கங்கனா ரனாவட்டிடம் அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதா எனக் கேள்வி கேட்கப்பட்டது.

Jayam-Ravi-with-Kangana-Ranaut

அதற்கு பதிலளித்த நடிகை கங்கனா ரனாவட் ”நான் இப்போது ‘மணிகர்னிகா’ படத்தில் நடித்து வருகிறேன். அதே போல நான் நடித்து வரும் ‘பங்கா’ திரைப்படம் குறித்து அறிவிப்பும் சமீபத்தில் தான் வெளியாகி உள்ளது. நான் ஒரு வேலையை செய்தால் அதில் முழு மனதுடன் செய்யவேண்டும் என்று நினைப்பேன். ஒருவேளை நான் அரசியலுக்கு வந்தால் திருமணம் செய்துகொள்ளமாட்டேன், குழந்தைகள் பெற்றுக்கொள்ள மாட்டேன். நாட்டிற்காக சேவை செய்வேன் ” என்று தெரிவித்துள்ளார்.