கொரோனா பாதிப்பு, பணமின்றி தவிக்கும் கார் ஓட்டுனர். உருக்கமான பதிவை பகிர்ந்த காஜல்.

0
1419
kajal

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தற்போது போரை விட பயங்கர அச்சுறுத்தல் விஷயமாக இருப்பது இந்த கொரோனா வைரஸ் தான். சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் தான் இந்த கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் இந்த கொரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது. இந்த கொரோனா வைரஸினால் பல்லாயிரக் கணக்கானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் கவலையில் உள்ளார்கள். இந்த வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும், இந்த கொரோனா வைரஸினால் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து உள்ளார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கவில்லை. கொரோனா வைரஸ் தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த கொரோனா வைரஸ் குறித்து பல பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

இதையும் பாருங்க : நடிகை மாளவிகாவிற்கு இவ்வளவு பெரிய மகன் மற்றும் மகள் இருக்காங்களா.

அந்த வகையில் பிரபல நடிகை காஜல் அகர்வால் இந்த கரோனா வைரஸ் குறித்து கருத்து ஒன்று பதிவிட்டு உள்ளார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல், தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், விக்ரம், சூர்யா என்று பல்வேறு நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை காஜல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்வர்ட் மெசேஜ் ஒன்றை பகிர்ந்திருந்தார்.

-விளம்பரம்-

அதில், கடந்த 48 மணி நேரத்தில் நான் தான் அவரின் முதல் கஸ்டமர் என்று,  ஒரு கேப் ட்ரைவர் என்னிடம் அழுதபடி கூறினார். இன்றாவது மளிகை சாமான்கள் வாங்கிவிடலாம் என என் மனைவி எதிர்ப்பார்த்து காத்திருப்பாள். இந்த கொரோனா வைரஸ் நம்மை பல வகையில் தாக்கியுள்ளது. ஆனால் தின வருமானத்தை நம்பி வாழ்பவர்கள் இன்னும் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். அதனால் நான் அவருக்கு கூடுதலாக 500 ரூபாய் கொடுத்தேன். இதுபோல் நாம் அனைவரும் செய்ய வேண்டும். தனது கடைசி கஸ்டமருக்கு பிறகு அவர்70 மணி நேரம் யாரும் கிடைக்காமல் கார் ஓட்டியுள்ளார். அதனால் உங்கள் கேப் ட்ரைவர்கள் மற்றும் தெரு வியாபாரிகளுக்கு கொஞ்சம் அதிகமாகவே பணம் செலுத்துங்கள். நீங்களே அவர்களின் கடைசி கஸ்டமராக கூட இருக்கலாம். என்று பதிவிடபட்டுள்ளது.

இந்தியாவில் மாநில வாரியாக கொரோனா தொற்றியவர்கள் புள்ளிவிவரம்.
இந்தியாவில் மாநில வாரியாக கொரோனா தொற்றியவர்கள் புள்ளிவிவரம். நேற்று (17 மார்ச்) மாலை 5 :15 நிலவரம்

தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக வரும் 31 வரை கல்லூரிகள், பள்ளிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் என்று பல பொது இடங்கள் மூடப்பட்டுள்ளன. இதுவரை இந்தியாவில் மட்டும் 137 கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது. இதில் இதுவரை 3 பேர் மரணமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில், டெல்லி, கர்நாடக, மகாராஷ்டிரா என்று மூன்று மாநிலத்தில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளார்கள்.

Advertisement