தமிழ் சினிமாவில் 90 கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் மாளவிகா. அல்டிமேட் ஸ்டார் அஜித்துடன் 1999 ஆம் ஆண்டு வெளியான ‘உன்னை கொடு என்னை தருவேன்’ என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர். அந்த படத்திற்கு பிறகு மீண்டும் அஜித்துடன் இணைந்து ஆனந்த பூங்காற்றே என்ற படத்திலும் நடித்தார். அஜித்துடன் நடித்த பின்னர் நடிகை மாளவிகா அவர்கள் ரோஜா வனம், வெற்றிக் கொடி கட்டு, கந்தா கடம்பா கத்திரவேலா, பேரழகன், வசூலராஜா எம்.பி.பி.எஸ், சந்திரமுகி, வியாபாரி, நான் அவன் இல்லை, திருட்டுப்பயலே என்று பல படங்களில் நடித்து வந்தார்.
ஆரம்பத்தில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த மாளவிகா கடந்த 2005 ஆண்டு ‘சி யூ அட் நைட்’ என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படம் தான் இவரது சினிமா வாழ்க்கைக்கு முட்டுக்கட்டாக இருந்தது. அந்த படத்தில் நடித்ததற்கு பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது.
இதையும் பாருங்க : வாய் தவறி சொல்லிட அண்ணா. மாஸ்டர் ஆடியோ லாஞ்சில் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்ட நடிகை கௌரி கிஷன்
பின் இவர் சில படங்களில் துணை நடிகையாகும், ஐட்டம் டான்ஸராகவும் ஆட்டம் போட்டார். அதிலும் வாய்ப்புகள் சரியாக அமையாமல் போனதால் கடந்த 2007ஆம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டில் ஆகி விட்டார்.
இவர்களுக்கு அனன்யா என்ற மகளும், ஆரவ் என்ற மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பின்பும் சில படங்களில் நடிகை மாளவிகா நடித்தார். இவர் கடைசியாக 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஆயுதம் செய்வோம், ஆறுபடை என்ற படத்தில் நடித்தார். மேலும், நடிகை மாளவிகா அவர்கள் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருப்பார்.
இந்நிலையில் நடிகை மாளவிகா அவர்கள் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரங்களில் இருக்கும் புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து உள்ளார். அதில் தன்னுடைய செல்ல மகளுடன் விதவிதமாக எடுத்த போஸ்களை மாளவிகா சோசியல் மீடியாவில் பதிவிட்டு உள்ளார்.
அந்த புகைப்படத்தில் மாளவிகா அவர்களின் மகளை பார்ப்பதற்க்கு அப்படியே அச்சு அசலாக அம்மாவைப் போலவே இருக்கிறார் என்று கூறி வருகிறார்கள். மேலும், இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் அனைவரும் கைக்குகளை குவித்து வருகின்றனர்.