அந்த நடிகருடன் நடிக்க மாட்டேன்..! காரணம் இதுவா..! யார் அந்த நடிகர் தெரியுமா..? புகைப்படம் உள்ளே..!

0
1764

நடிகை காஜல் அகர்வால், தமிழ்,தெலுங்கு என்ற மொழிகளில் உள்ள ஒரு சில முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு இயக்குனர் பேரரசு இயக்கிய “பழனி” என்று படத்தில் அறிமுகமான இவர் பின்னர் படிப்படியாக முன்னேறி சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கிவருகிறார்.

kajal agarwal

- Advertisement -

ஆனால் சமீப காலமாக அம்மணிக்கு கட்டம் சரியில்லாததால் படவாய்ப்புகள் சரிவர கிடைக்கவில்லை. இதனால் பாலிவுட்டில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடும் ஐட்டம் டான்சராக கூட மாறினார். நீண்ட இடைவேளைக்கு பிறகு இவருக்கு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது ஆனால், அதில் ஹீரோ யார் என்று தெரிந்ததும் அந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று அடாவடி செய்துள்ளார் நடிகை காஜல்.

இந்தியில் 2014 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த படம் “குயின்”. காமெடி ட்ராமா படமான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த அப்படத்தை தற்போது “பாரிஸ் பாரிஸ்” தமிழில் ரீ மேக் செய்து வருகின்றனர். இந்த படத்தை நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கிவருகிறார்.

-விளம்பரம்-

navdeep

ramesh

இந்த படத்தின் கதாநாயகனாக நடிக்க, நடிகை காஜல் அகர்வாலுடன் “அஆஇஈ ” என்ற படத்தில் நடித்த நவ்தீப் முதலில் ஒப்பந்தமாகியுள்ளார். இதனை கேட்ட காஜல் அவர் ஹீரோவாக நடித்தால் நான் அந்த படத்தில் கண்டிப்பாக நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இதனால் வேறு வழியின்றி நடிகர் ரமேஷ் அரவிந்தே இந்த படத்தில் ஹீரோவாக நடிக்குள்ளாராம். நடிகர் நவ்தீப் நடிகை காஜலிடம் ஒருமுறை தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement