ஐஸ் நிறைந்த குளியல் தொட்டியில் காஜல் அகர்வால் கொடுத்த போஸ். பாத்தா உறைஞ்சி போயிடுவீங்க.

0
2015
kajal-agarwal

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். 2004 ஆம் ஆண்டு ‘ஹோ கயா நா’ என்ற ஹிந்தி படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதற்கு பிறகு இவர் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் பிஸியாக நடித்து கொண்டு வருகிறார். இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என்று பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து படங்களில் நடித்து உள்ளார்.

கடந்த வருடம் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் அவர்கள் கோடை வெயிலை எப்படி சமாளிப்பது? என்று சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

அதில் காஜல் அகர்வால் அவர்கள் பாத்டப் முழுவதும் ஐஸ் கட்டிகளை போட்டுக்கொண்டு அதற்குள் அமர்ந்தபடி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி உள்ளார். இந்த கோடை விடுமுறைக்கு ஜூலு ஜூலு என்று இருக்கும். தற்போது அந்த புகைப்படங்களை காஜல் அகர்வால் இணையத்தில் வெளியிட்டு உள்ளார். இது தற்போது ரசிகர்கள் கண்களுக்கு குளிர்சியாக இருக்கும்.

தற்போது காஜல் அகர்வால் அவர்கள் துல்கர் சல்மானுடன் டான்ஸ் மாஸ்டர் இயக்கும் ஹே சினாமிகா என்கிற படத்தில் நடித்து வருகிறார். அடுத்து இவர் பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக காத்துக் கொண்டு இருக்கிறார். பின் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் நடிக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement